சினிமா செய்திகள்

அனுமதி இன்றி விடுதி நடத்தும் வில்லன் நடிகர் சோனு சூட் மீது வழக்கு + "||" + Without permission Hostel accommodation Villain actor The case against Sonu Sood

அனுமதி இன்றி விடுதி நடத்தும் வில்லன் நடிகர் சோனு சூட் மீது வழக்கு

அனுமதி இன்றி விடுதி நடத்தும் வில்லன் நடிகர் சோனு சூட் மீது வழக்கு
இந்தியில் முன்னணி வில்லன் நடிகராக இருப்பவர் சோனு சூட். இவர் தமிழில் கள்ளழகர், கோவில் பட்டி வீரலட்சுமி, சந்திரமுகி, அருந்ததி, சாகசம், ஒஸ்தி, தேவி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்து இருக்கிறார். சோனு சூட் மும்பையில் உள்ள ஜூஹூ பகுதியில் சொந்தமாக லவ் அன்ட் லட் என்ற பெயரில் தங்கும் விடுதி மற்றும் உணவகம் நடத்தி வருகிறார்.

இந்த விடுதி 7 மாடிகளை கொண்டது. 23 அறைகள் உள்ளன. இந்த விடுதியை நடத்துவதற்கு அனுமதி கேட்டு மும்பை மாநகராட்சியில் சோனு சூட் விண்ணப்பித்து இருந்தார். ஆனால் மாநகராட்சி அனுமதி வழங்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. அதையும் மீறி விடுதியையும் உணவகத்தையும் அவர் நடத்தி வருவதாக அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.


விடுதியை இடிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் மும்பை மாநகராட்சிக்கு புகார் மனுக்களும் அனுப்பினர். இதைத்தொடர்ந்து சோனு சூட் மீது வழக்கு தொடர மும்பை மாநகராட்சி முடிவு செய்து இருப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதுகுறித்து சோனு சூட் கூறும்போது, “நான் விடுதி மற்றும் உணவகத்தை உரிய அனுமதி பெற்றுத்தான் நடத்தி வருகிறேன். விடுதிக்கு எதிராக மாநகராட்சி நடவடிக்கை எடுப்பது குறித்து எந்த தகவலும் எனக்கு வரவில்லை” என்றார்.