சினிமா செய்திகள்

பார்த்திபன்-சீதா மகள் திருமண நிச்சயதார்த்தம் + "||" + Parthiban, Seetha daughter Wedding engagement

பார்த்திபன்-சீதா மகள் திருமண நிச்சயதார்த்தம்

பார்த்திபன்-சீதா மகள் திருமண நிச்சயதார்த்தம்
மகள் அபிநயா திருமண நிச்சயதார்த்தம் நிகழ்ச்சியில் பார்த்திபன்-சீதா. நடிகர் பார்த்திபனும் நடிகை சீதாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களுக்கு அபிநயா, கீர்த்தனா என்ற மகள்களும் ராக்கி என்ற மகனும் உள்ளனர்.
பார்த்திபன்-சீதா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து தற்போது பிரிந்து வாழ்கிறார்கள். கீர்த்தனா ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருந்தார்.

கீர்த்தனாவுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. இந்த நிலையில் மூத்த மகள் அபிநயாவுக்கும் இப்போது திருமணம் முடிவாகி உள்ளது. இவருக்கும் சென்னையை சேர்ந்த நரேஷ் கார்த்திக் என்பவருக்கும் திருமணம் நிச்சயம் செய்து உள்ளனர்.


நரேஷ் கார்த்திக், நடிகர் எம்.ஆர்.ஆர். வாசுவின் மகள் சத்யா ஜெயச்சந்திரனின் மகன் ஆவார். எம்.ஆர்.ராதாவின் கொள்ளுப்பேரன் என்பது குறிப்பிடத்தக்கது.

அபிநயா-நரேஷ் கார்த்திக் திருமண நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. இதில் இரு வீட்டு குடும்பத்தினரும் உறவினர்களும் கலந்து கொண்டனர். இவர்கள் திருமணம் விரைவில் நடக்க இருக்கிறது.

இதுகுறித்து நடிகை சீதா கூறும்போது, எனது மகள் அபிநயா-நரேஷ் கார்த்திக் திருமணம் வருகிற 24-ந்தேதி சென்னையில் நடக்கிறது.

எனது மகள் பக்கத்தில் இருக்க வேண்டும் என்றுதான் வெளிநாட்டு வரன்களை தவிர்த்தேன். இப்போது சென்னையிலேயே மாப்பிள்ளை அமைந்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. திருமண அழைப்பிதழ் கொடுத்து வருகிறோம்” என்றார்.

ஆசிரியரின் தேர்வுகள்...