சினிமா செய்திகள்

கால்பந்து பயிற்சியாளர் வேடம் விஜய்யின் புதிய படம் ‘மைக்கேல்’? + "||" + Play football trainer Vijay new film is Michael

கால்பந்து பயிற்சியாளர் வேடம் விஜய்யின் புதிய படம் ‘மைக்கேல்’?

கால்பந்து பயிற்சியாளர் வேடம் விஜய்யின் புதிய படம் ‘மைக்கேல்’?
விஜய்-ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் கடந்த வருடம் ‘சர்கார்’ படம் வந்தது. இதில் அரசை விமர்சிக்கும் காட்சிகள் இருப்பதாக சர்ச்சைகளும் எதிர்ப்புகளும் கிளம்பின. அதையும் மீறி படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. வசூலும் குவித்தது. தற்போது அட்லீ இயக்கும் படத்தில் விஜய் நடிக்கிறார்.
தெறி, மெர்சல் படங்களை தொடர்ந்து 3-வது தடவையாக இருவரும் இதில் இணைந்துள்ளனர். இந்த படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார். வில்லுக்கு பிறகு மீண்டும் இதில் விஜய் ஜோடியாகி உள்ளார். கதிர், விவேக், யோகிபாபு ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள்.


ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதன் படப்பிடிப்பு 2 மாதங்களுக்கு முன்பு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சென்னையில் நடந்த படப்பிடிப்பின்போது விஜய்யை காண தினமும் ரசிகர்கள் திரண்டனர். இதனால் படப்பிடிப்புக்கு தடங்கல்கள் ஏற்பட்டன.

தீபாவளிக்கு படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர். இது விஜய்க்கு 63-வது படம் ஆகும். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து இந்த படம் தயாராவதாக கூறப்படுகிறது. இதில் விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடிப்பதாகவும் அவரது கதாபாத்திரத்தின் பெயர் மைக்கேல் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

பல படங்களுக்கு கதாபாத்திரத்தின் பெயரையே தலைப்பாக வைத்து உள்ளனர். எனவே விஜய்யின் புதிய படத்துக்கும் ‘மைக்கேல்’ என்ற பெயரை வைக்க பரிசீலிக்கின்றனர்.