சினிமா செய்திகள்

நீண்ட நாள் ஆசை நிறைவேறியது ரஜினிகாந்த் படத்தில், யோகி பாபு + "||" + In Rajinikanth's film, Yogi Babu

நீண்ட நாள் ஆசை நிறைவேறியது ரஜினிகாந்த் படத்தில், யோகி பாபு

நீண்ட நாள் ஆசை நிறைவேறியது ரஜினிகாந்த் படத்தில், யோகி பாபு
நீண்ட நாள் ஆசை நிறைவேறியது ரஜினிகாந்த் படத்தில், யோகி பாபு
முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தில், யோகி பாபு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி காமெடி நடிகராக இருப்பவர், யோகி பாபு. அவர் இல்லாத படங்களே இல்லை என்ற நிலை இருக்கிறது. அவரை கதையின் நாயகனாக வைத்தும், சில படங்கள் தயாராகி வருகின்றன. இதனால் யோகி பாபுவின் சம்பளம் கணிசமாக உயர்ந்துள்ளது. சமீபத்தில் தான் அவர் வீடு கட்டி குடியேறினார். மிகவும் ‘பிஸி’யாக நடித்து வருவதால், அவருக்கு கால்ஷீட் பிரச்சினை ஏற்படுகிறது.

கால்ஷீட் பிரச்சினை காரணமாகவே யோகி பாபுவால் ‘பேட்ட’ படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டது. ஆனால், ‘சர்கார்’ படத்தில் யோகி பாபு நடித்ததால், ஏ.ஆர்.முருகதாஸ் தனது அடுத்த படத்திலும் அவரை நடிக்க வைக்க முடிவு செய்துள்ளார்.

ரஜினிகாந்தை வைத்து அவர் இயக்கும் புதிய படத்தில் யோகி பாபு நிச்சயம் இருப்பார் என்றே ‘கோலிவுட்’ வட்டாரங்கள் கூறுகின்றன. கால்ஷீட் பிரச்சினை வரக்கூடாது என்பதற்காக முன்கூட்டியே அவரை ஒப்பந்தம் செய்யவும் முருகதாஸ் முடிவு செய்துள்ளார்.

இதனால் ரஜினியுடன் நடிக்கும் யோகி பாபுவின் நீண்ட நாள் ஆசை நிறைவேற உள்ளது. ‘பேட்ட’ படத்தில் தவறிய வாய்ப்பு, முருகதாஸ் இயக்கும் புதிய படத்தில் கிடைத்துள்ளதால், யோகி பாபு மகிழ்ச்சியில் இருக்கிறாராம்.

பொதுவாக தனது படங்களில் ரஜினிகாந்த் ‘காமெடி’யில் பின்னி பெடலெடுப்பார். அவருடன் காமெடி நடிகரும் சேர்ந்து விட்டால் படத்தில் நகைச்சுவைக்கு பஞ்சமே இருக்காது. ரஜினிகாந்த்-கவுண்டமணி, ரஜினிகாந்த்-செந்தில், ரஜினிகாந்த்-வடிவேலு கூட்டணியில் பல வெற்றி படங்கள் அமைந்தன. ஆனால், சமீபகாலமாக ரஜினிக்கு அப்படிப்பட்ட காமெடி ஜோடி யாரும் கிடைக்கவில்லை. முருகதாஸ் படத்தில் அந்த குறையை யோகிபாபு நீக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.