சினிமா செய்திகள்

மது, கஞ்சா, ஆபாச வசனம் ஓவியா படத்துக்கு எதிர்ப்பு + "||" + Alcohol, cannabis, pornographic verse Oviya film protest

மது, கஞ்சா, ஆபாச வசனம் ஓவியா படத்துக்கு எதிர்ப்பு

மது, கஞ்சா, ஆபாச வசனம் ஓவியா படத்துக்கு எதிர்ப்பு
தமிழில் களவானி படத்தில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்த ஓவியா டி.வி பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மேலும் பிரபலமானார்.
 தற்போது பெண் டைரக்டர் அனிதா உதீப் இயக்கத்தில் ‘90 எம்.எல்’ படத்தில் நடித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்சிக்கு பிறகு வெளிவரும் படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உள்ளது.

இந்த படத்தின் டிரெய்லர் இப்போது வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. முத்த காட்சி, படுக்கை அறை காட்சி, மது, சிகரெட் என்று டிரெய்லர் உலுக்கியது. பெண்களே இரட்டை அர்த்த வசனங்கள் பேசி அதிர வைத்துள்ளனர். ஓவியா மது அருந்துகிறார். கஞ்சா அடிக்கிறார். ஆபாசமாக பேசுகிறார்.

இந்த படத்தை வலைத்தளத்தில் பலரும் கண்டித்து வருகிறார்கள். படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று பெண்கள் அமைப்பை சேர்ந்தவர்கள் கருத்து பதிவிட்டுள்ளனர். இதுகுறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்த ஓவியா “விதையை வைத்து பழத்தின் ருசியை தீர்மானிக்காதீர்கள்” என்றார்.

படத்தை தணிக்கை குழுவினர் பார்த்து ஆபாச இரட்டை அர்த்த வசனங்கள் இருப்பதால் ‘ஏ’ சான்றிதழ் அளித்துள்ளனர். இந்த படம் குறித்து இயக்குனர் அனிதா உதீப் கூறும்போது, “பெண்கள் ஒரு கட்டமைப்புக்குள் வாழாமல் அதை உடைத்து சொந்தமாக முடிவு எடுப்பதை படம் பேசும். அழகு நிலையத்தில் வேலை பார்க்கும் ஓவியாவும் அவரது தோழிகளும் தங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்வதே” கதை என்றார்.