சினிமா செய்திகள்

நடிகர் சூர்யா தயாரிக்கும் நகைச்சுவை படத்தில் ஜோதிகா + "||" + Actor Surya will be producing Jyothika in the comedy film

நடிகர் சூர்யா தயாரிக்கும் நகைச்சுவை படத்தில் ஜோதிகா

நடிகர் சூர்யா தயாரிக்கும் நகைச்சுவை படத்தில் ஜோதிகா
ஜோதிகா இப்போது மீண்டும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து தீவிரமாக நடித்து வருகிறார்.
புதிய படத்தின் பூஜையில் சூர்யா, ஜோதிகா, ரேவதி பங்கேற்ற காட்சி.
தி ருமணத்துக்கு பிறகு சில வருடங்கள் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த ஜோதிகா இப்போது மீண்டும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து தீவிரமாக நடித்து வருகிறார். ஏற்கனவே நடித்து திரைக்கு வந்த ‘36 வயதினிலே’ நல்ல வசூல் பார்த்தது. தொடர்ந்து மகளிர் மட்டும், பாலா இயக்கத்தில் நாச்சியார், மணிரத்னத்தின் செக்கச்சிவந்த வானம், மற்றும் காற்றின் மொழி, ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.

ராஜ் இயக்கத்தில் ஆசிரியை கதாபாத்திரத்தில் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது. தற்போது குலேபகாவலி படத்தை எடுத்து பிரபலமான கல்யாண் இயக்கத்தில் தயாராகும் நகைச்சுவை படத்தில் ஜோதிகா நடிக்கிறார். இதுவும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளித்துள்ள கதையம்சத்தில் உருவாகிறது. ஜோதிகாவுடன் ரேவதி, யோகிபாபு, ஆனந்தராஜ், மன்சூர் அலிகான், ராஜேந்திரன், ஜெகன் ஆகியோரும் நடிக்கின்றனர். இந்த படத்துக்கு ஆனந்தகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். படத்தை 2டி என்டர்டெயின் மென்ட் சார்பில் நடிகர் சூர்யா தயாரிக்கிறார். படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.

இதன் பூஜை சென்னையில் நேற்று நடந்தது. இதில் நடிகர் சூர்யா, ஜோதிகா, ரேவதி, தயாரிப்பாளர் சங்க பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு, இணை தயாரிப்பாளர் ராஜசேகர கற்பூர பாண்டின் மற்றும் படத்தின் இயக்குனர் கல்யாண் ஆகியோர் கலந்து கொண்டனர்.