சினிமா செய்திகள்

மகள் சவுந்தர்யாவின திருமண நிகழ்ச்சியில் ரஜினி நடனம் + "||" + Daughter Soundarya Wedding show Rajini dance

மகள் சவுந்தர்யாவின திருமண நிகழ்ச்சியில் ரஜினி நடனம்

மகள் சவுந்தர்யாவின திருமண நிகழ்ச்சியில் ரஜினி நடனம்
கடந்த இரண்டு நாட்களாக திருமண சடங்கு நிகழ்ச்சிகள் நடந்து வந்தன. ராகவேந்திரா மண்டபத்தில் நேற்றுமுன்தினம் திருமண வரவேற்பு நடந்தது.
ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யாவுக்கும் தொழில் அதிபர் விசாகனுக்கும் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று காலை திருமணம் நடக்கிறது. இதையொட்டி கடந்த இரண்டு நாட்களாக திருமண சடங்கு நிகழ்ச்சிகள் நடந்து வந்தன. ராகவேந்திரா மண்டபத்தில் நேற்றுமுன்தினம் திருமண வரவேற்பு நடந்தது.

இதில் உறவினர்கள் மற்றும் திரையுலகை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். நேற்று காலை சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டில் திருமண சடங்குகள் நடந்தன. ராதா கல்யாண வைபோக நிகழ்ச்சியும் நடந்தது. இதில் நெருங்கிய உறவினர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் பங்கேற்று “ஒருவன் ஒருவன் முதலாளி உலகில் மற்றவன் தொழிலாளி” என்ற பாடலுக்கு நடனம் ஆடினார். இந்த நடன வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. திருமண வரவேற்பு மற்றும் சடங்கு நிகழ்ச்சிக்கு வந்தவர்களுக்கு வித்தியாசமான முறையில் விதை பொட்டலங்கள் வழங்கப்பட்டன.

அதில் எந்த மரத்தின் விதை என்று தகவலும் இடம் பெற்று இருந்தது. மரம் வளர்க்க விரும்புபவர்கள் அந்த விதைகளை நட்டு மரம் வளர்க்கலாம். முடியாதவர்கள் அந்த விதைகளை ஏதாவது ஒரு இடத்தில் வீசினால் அது மரமாக வளரும். விதை பொட்டலங்கள் வழங்கிய ரஜினிகாந்த் முயற்சியை வலைத்தளங்களில் பாராட்டி கருத்து பதிவிட்டு வருகிறார்கள்.