சினிமா செய்திகள்

”அதிசயமே அசந்து போகும்” ஐஸ்வர்யா ராயை பார்த்து அசந்து போன ரசிகர்கள்! + "||" + She is 45 years old woman!!!! Ong! @AishwaryaRaiWeb AishwaryaRaiBachchan

”அதிசயமே அசந்து போகும்” ஐஸ்வர்யா ராயை பார்த்து அசந்து போன ரசிகர்கள்!

”அதிசயமே அசந்து போகும்” ஐஸ்வர்யா ராயை பார்த்து அசந்து போன ரசிகர்கள்!
45 வயதை எட்டியும், தற்போதைய இளம் ஹீரோயின்கள் பலருக்கு டப் காம்பட்டிஷன் கொடுத்து வருபவர் நடிகை ஐஸ்வர்யாராய்.
சென்னை,

உலக அழகி பட்டம் வென்று இந்தி படங்களில் நடித்து சர்வதேச அளவில் ரசிகர்களை கவர்ந்த ஐஸ்வர்யாராய் வசீகரிக்கும் கண்களை உடையவர். ஐஸ்வர்யா ராய் 1997-ல் தமிழில் நடிகையாக அறிமுகம் ஆனார். மணிரத்னம் இயக்கிய ‘இருவர்’ படத்தில் இந்த வாய்ப்பு கிடைத்தது. பின்னர் ‌ஷங்கர் இயக்கத்தில் பிரசாந்துடன் ‘ஜீன்ஸ்’ படத்தில் நடித்தார். இதில் 2 வேடங்களில் வித்தியாசமாக தோன்றி தமிழ் ரசிகர்களிடம் தனி இடம் பிடித்தார்.

இதையடுத்து இந்திபட உலகில் முன்னணி நடிகையானார். அமிதாப்பச்சன் மகன் அபிஷேக்பச்சனை திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டுள்ளார். என்றாலும், திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது ஐஸ்வர்யாராய்க்கு வயது 45. இந்த வயதிலும் படங்களில் கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில் ஐஸ்வர்யா ராய், தற்போது புதிய போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி, அதில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்க்கும் ரசிகர்கள் கிளீன் போல்ட் ஆகும் அளவிற்கு அழகில் ஜொலிக்கிறார் ஐஸ்வர்யா ராய். மேலும் பலர் இந்த வயதிலும் ஐஸ்வர்யா ராய் இப்படியா? என அசந்து போய் உள்ளனர்.