சினிமா செய்திகள்

மீண்டும் ‘வர்மா’ படப்பிடிப்பு: விக்ரம் மகன் துருவ் ஜோடி ஜான்வி? + "||" + 'Varma' shooting again: Vikram son Dhruv pair of janavi?

மீண்டும் ‘வர்மா’ படப்பிடிப்பு: விக்ரம் மகன் துருவ் ஜோடி ஜான்வி?

மீண்டும் ‘வர்மா’ படப்பிடிப்பு: விக்ரம் மகன் துருவ் ஜோடி ஜான்வி?
மீண்டும் வர்மா படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இதில் விக்ரம் மகன் துருவ் ஜோடியாக ஜான்வி நடிப்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

தெலுங்கில் வெற்றிகரமாக ஓடிய ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தை தமிழில் விக்ரம் மகன் துருவ்வை கதாநாயகனாக அறிமுகப்படுத்தி ‘வர்மா’ என்ற பெயரில் பாலா இயக்கினார். இதன் படப்பிடிப்பை முடித்து டிரெய்லரையும் சமீபத்தில் வெளியிட்டனர். ஆனால் படத்தை திருப்தியாக எடுக்கவில்லை என்று கூறி பட நிறுவனம் முழு படத்தையும் கைவிட்டு விட்டது.

துருவ்வை கதாநாயகனாக வைத்து மீண்டும் புதிய டைரக்டர் மூலம் படத்தை இயக்கப்போவதாகவும் அறிவித்தது. இதனால் பலகோடிகள் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இயக்குனர் பாலா இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில் “படைப்பு சுதந்திரம் கருதி வர்மா படத்தில் இருந்து விலகுவது நான் மட்டுமே எடுத்த முடிவு” என்று கூறியுள்ளார்.

அர்ஜுன் ரெட்டியின் ஒரிஜினல் கதையில் பாலா சில மாற்றங்கள் செய்ததாகவும், அதை தயாரிப்பு நிறுவனம் ஏற்காமல் முழு படத்தையும் கைவிட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது. புதிய வர்மா படத்தை இயக்கும்படி டைரக்டர் கவுதம் வாசுதேவ் மேனனிடம் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே வர்மா படத்தில் மேகா சவுத்திரி கதாநாயகியாக நடித்து இருந்தார். அவரை மாற்ற படக்குழுவினர் திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது. அவருக்கு பதிலாக மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வியை கதாநாயகியாக நடிக்க வைக்க பரிசீலிப்பதாக கூறப்படுகிறது.