சினிமா செய்திகள்

“தமன்னாவுடன் நடிப்பது சவாலாக இருந்தது”உதயநிதி பேட்டி + "||" + Udhayanidhi interview

“தமன்னாவுடன் நடிப்பது சவாலாக இருந்தது”உதயநிதி பேட்டி

“தமன்னாவுடன் நடிப்பது சவாலாக இருந்தது”உதயநிதி பேட்டி
உதயநிதி ஸ்டாலின்-தமன்னா இருவரும் முதல் முறையாக ஜோடி சேர்ந்த படம், ‘கண்ணே கலைமானே.’
இம்மாதம் இறுதியில் திரைக்கு வர இருக்கும் கண்ணே கலைமானே படத்தை சீனுராமசாமி டைரக்டு செய்திருக்கிறார். இதில், உதயநிதி இதுவரை நடித்திராத ஒரு கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். அதுபற்றி அவர் கூறுகிறார்:-

“ஆரம்பத்தில், சீனுராமசாமி எனக்கு வேறு ஒரு கதையை சொன்னார். அதில் என் கதாபாத்திரம் மிகவும் கட்டுமஸ்தான உடல் அமைப்பை கோரியது. அந்த தோற்றத்தை கொண்டு வர, நான்கு அல்லது ஐந்து மாதங்கள் ஆகும். ஆனால், சீக்கிரமே படத்தை தொடங்க வேண்டிய சூழ்நிலை. அப்போதுதான் அவர் எனக்கு கண்ணே கலைமானே’ கதையை சொன்னார். இந்த படம் எனக்கு ஒரு ‘ஸ்பெஷல்’ ஆன படமாக இருக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது.

தமன்னா, ஒரே ‘டேக்’கில் நடிக்கக் கூடிய நடிகை. அவருடன் இணைந்து பணியாற்றுவது மிகவும் சவாலாக இருந்தது. படத்தில் நிறைய  உணர்ச்சிகரமான காட்சிகள் வருகிறது. அந்த காட்சிகளில் தமன்னா மிக எளிதாக நடித்தார். அவர், ‘சிங்கிள்’ டேக்கில் நடித்ததை பார்த்து வியப்பு அடைந்தேன்.

இதில், நான் வேளாண்மையை நம்புகிற விவசாயி. என்றாலும் இது, விவசாய பிரச்சினைகளை பேசுகிற படம் அல்ல. நல்ல மனதுள்ள நேர்மையான வாழ்க்கை வாழும் இரண்டு பேர் சந்தித்துக் கொள்ளும்போது என்ன நடக்கிறது? என்பது பற்றிய படம். மனித உறவுகளை பற்றிய கதை” என்றார், உதயநிதி. இவரே படத்தை தயாரித்தும் இருக்கிறார்.”