சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயன்-கவுதம் கார்த்திக் நடிக்கஞானவேல் ராஜாவின் 2 புதிய படங்கள் + "||" + Sivakarthikeyan-Gautham Karthik Gnanavel Raja 2 new Movies

சிவகார்த்திகேயன்-கவுதம் கார்த்திக் நடிக்கஞானவேல் ராஜாவின் 2 புதிய படங்கள்

சிவகார்த்திகேயன்-கவுதம் கார்த்திக் நடிக்கஞானவேல் ராஜாவின் 2 புதிய படங்கள்
கே.ஈ.ஞானவேல் ராஜா 2 புதிய படங்களை தயாரிக்கிறார். அதில் ஒரு படத்துக்கு, ‘மிஸ்டர் லோக்கல்’ என்றும், இன்னொரு படத்துக்கு, ‘தீமைதான் வெல்லும்’ என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளன.
‘மிஸ்டர் லோக்கல்’ படத்தில், சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். ராஜேஷ் டைரக்டு செய்கிறார்.

கோடை விடுமுறை விருந்தாக, ‘மிஸ்டர் லோக்கல்’ படம் திரைக்கு வரும். படத்தை பற்றி டைரக்டர் ராஜேஷ் கூறியதாவது:-

“குழந்தை ரசிகர்களை மனதில் வைத்து, குடும்பத்துடன் ரசிக்கும் வகையில், இந்த படத்தை உருவாக்கி இருக்கிறோம். ஒரே ஒரு பாடல் காட்சியை தவிர, மற்ற காட்சிகள் அனைத்தும் படமாக்கி முடிக்கப்பட்டு விட்டன. இதில், சிவகார்த்திகேயன்-நயன்தாரா இருவருக்கும் முக்கியத்துவம் அளிக்கும் கதை, இது. ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் ராதிகா சரத்குமார் நடிக்கிறார். கலகலப்புக்கு யோகி பாபு இருக்கிறார்” என்றார், டைரக்டர் ராஜேஷ்.

‘தீமைதான் வெல்லும்’ படத்தில், கவுதம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிக்கும் கதாநாயகி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. சாண்டி, டைரக்டு செய்கிறார்.

இது, ஒரு திகில் படம். டி.இமான் இசையமைக்கிறார். கவுதம் கார்த்திக்குடன் ஜான் விஜய், சதீஷ் ஆகிய இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி, தொடர்ந்து நடைபெறுகிறது.