சினிமா செய்திகள்

2 வேடங்களில், அருண் விஜய் நடிக்கஒரு குற்ற பின்னணியில், ‘தடம்’ + "||" + In 2 roles, Arun Vijay will act

2 வேடங்களில், அருண் விஜய் நடிக்கஒரு குற்ற பின்னணியில், ‘தடம்’

2 வேடங்களில், அருண் விஜய் நடிக்கஒரு குற்ற பின்னணியில், ‘தடம்’
‘தடம்’ படத்தில் அருண் விஜய் 2 வேடங்களில் நடிக்கிறார்.
‘தடையற தாக்க’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் தடம் பதித்தவர், டைரக்டர் மகிழ்திருமேனி. இவருக்கும், கதாநாயகன் அருண் விஜய்க்கும் ‘தடையற தாக்க’ படம் பெயரும், புகழும் வாங்கி கொடுத்தது. இதைத்தொடர்ந்து இருவரும் மீண்டும் ‘தடம்’ என்ற படத்தில் இணைந்தனர்.

‘தடம்’ பற்றி டைரக்டர் மகிழ்திருமேனி கூறுகிறார்:-

“நகரில், ஒரு குற்றம் நடக்கிறது. அது கதாநாயகன் அருண் விஜய்யை எப்படி பாதிக்கிறது? என்பதே கதை. இதில் அருண் விஜய் 2 வேடங்களில் நடிக்கிறார். இந்த படம் வெற்றி பெறுவது உறுதி. இது, அருண் விஜய்யை அடுத்த கட்டத்துக்கு தூக்கி நிறுத்தும். படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை பதற்றம் இருக்கும்.

தான்யா ஹோப், ஸ்மிருதி வெங்கட் ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். சோனியா அகர்வால், ஒரு முக்கிய வேடத்தில் நடித்து இருக்கிறார். பெப்சி விஜயன், யோகி பாபு ஆகியோரும் நடித்துள்ளனர்.”