சினிமா செய்திகள்

‘மீ டூ’வில் சிக்கிய பிரபலங்கள் - நடிகை மாதுரி தீட்சித் அதிர்ச்சி + "||" + Celebrities in 'me too' - Actress Madhuri Dixit shocked

‘மீ டூ’வில் சிக்கிய பிரபலங்கள் - நடிகை மாதுரி தீட்சித் அதிர்ச்சி

‘மீ டூ’வில் சிக்கிய பிரபலங்கள் - நடிகை மாதுரி தீட்சித் அதிர்ச்சி
மீ டூ வில் சிக்கிய பிரபலங்கள் குறித்து நடிகை மாதுரி தீட்சித் அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.

இந்தி நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பலர் ‘மீ டூ’வில் சிக்கி பட உலகை அதிர வைத்தனர். வில்லன் நடிகர் நானா படேகர் மீது தனுஸ்ரீதத்தா பாலியல் புகார் சொன்னார். நடன இயக்குனர் கணேஷ் ஆச்சார்யா, தயாரிப்பாளர் சமீர் சித்திக், இயக்குனர் ராகேஷ் சாரங் ஆகியோரும் ‘மீ டூ’வில் சிக்கினர்.

கங்கனா ரணாவத் குயின் பட இயக்குனர் விகாஸ் பாஹல் மீது பாலியல் புகார் கூறினார். மாதுரி தீட்சித், ஜுஹு சாவ்லா ஆகியோரை வைத்து ‘குலாப் கேங்’ படத்தை இயக்கிய சவுமிக் சென் படவாய்ப்பு தருவதாக தன்னிடம் தவறாக நடந்ததாக நடிகை ஒருவர் கூறினார். தொடர்ந்து மூன்று பெண்கள் அவர் மீது பாலியல் புகார் தெரிவித்தனர். பிரபல இந்தி நடிகர் அலோக்நாத் விருந்து நிகழ்ச்சியில், மதுவில் போதை பொருளை கலந்து தன்னை சீரழித்தாக பெண் தயாரிப்பாளர் விண்டா நந்தா குற்றம் சாட்டினார். மீ டூ வில் பிரபலங்கள் சிக்குவது குறித்து பிரபல இந்தி நடிகை மாதுரி தீட்சித் கருத்து தெரிவித்து உள்ளார். அவர் கூறியதாவது:-

“இந்தி திரையுலகினர் பாலியல் தொல்லை கொடுத்ததாக செய்திகள் வருகின்றன. இதை படிக்கும்போது எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. அவர்களை பற்றியெல்லாம் வேறுமாதிரி கணிப்புகள் இருந்தன. ஆனால் இப்போது வரும் விஷயங்கள் திகைப்பாக இருக்கிறது. நடிகர் அலோக்நாத், இயக்குனர் சவுமிக் சென் ஆகியோரை எல்லோருக்கும் தெரியும். அவர்கள் இந்த செயலில் ஈடுபட்டார்கள் என்பது எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.