சினிமா செய்திகள்

கேரளாவில், எம்.எல்.ஏ. பேச்சால் சர்ச்சை - மம்முட்டி, மோகன்லாலை விட விஜய்க்கு அதிக ரசிகர்களா? + "||" + In Kerala, MLA Speech controversy - Mammootty and Moganlal are more fans than Vijay?

கேரளாவில், எம்.எல்.ஏ. பேச்சால் சர்ச்சை - மம்முட்டி, மோகன்லாலை விட விஜய்க்கு அதிக ரசிகர்களா?

கேரளாவில், எம்.எல்.ஏ. பேச்சால் சர்ச்சை - மம்முட்டி, மோகன்லாலை விட விஜய்க்கு அதிக ரசிகர்களா?
கேரளாவில் மம்முட்டி, மோகன்லாலை விட விஜய்க்கு அதிக ரசிகர்கள் என்ற எம்.எல்.ஏ.வின் பேச்சால் சர்ச்சை எழுந்துள்ளது.

விஜய் நடித்த படங்கள் கேரளாவிலும் வெற்றிகரமாக ஓடுகின்றன. மலையாள சூப்பர் ஸ்டார்களான மம்முட்டி, மோகன்லால் படங்களை விட அதிக வசூல் ஈட்டுகின்றன. ஜில்லா, துப்பாக்கி, தலைவா, தெறி, மெர்சல், சர்கார் உள்ளிட்ட பல படங்கள் அங்கு நல்ல வசூல் பார்த்துள்ளன.

கேரள வினியோகஸ்தர்களும் விஜய் படங்களை அதிக விலைக்கு வாங்கி வெளியிட்டு லாபம் பார்க்கிறார்கள். விஜய் படங்களுடன் போட்டியிடாமல் மலையாள நடிகர்கள் தங்கள் படங்கள் வெளியீட்டை தள்ளி வைக்கும் நிலையும் உள்ளது. விஜய் படங்கள் வெளியாகும்போது கேரள ரசிகர்கள் தியேட்டர்களில் கட்-அவுட் வைப்பது, பால் அபிஷேகம் செய்வது என்று அமர்க்களப்படுத்துகின்றனர்.

இந்த நிலையில் கேரளாவில் மலையாள நடிகர்களை விட விஜய்க்கு அதிக ரசிகர்கள் உள்ளனர் என்று கேரள எம்.எல்.ஏ. ஜார்ஜ் பரபரப்பாக பேசினார். டி.வி. நிகழ்ச்சியொன்றில் அவர் பங்கேற்று பேசும்போது, “கேரள தியேட்டர்களில் விஜய் கட்-அவுட்களுக்கு ரசிகர்கள் பால் அபிஷேகம் செய்வதை நான் உள்பட பலரும் பார்த்து இருக்கிறோம். கேரளாவில் மலையாள நடிகர்களை விட விஜய்க்கு அதிக ரசிகர்கள் உள்ளனர்” என்றார்.

இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மம்முட்டி, மோகன்லால் ரசிகர்கள் ஜார்ஜை சமூக வலைத்தளங்களில் கண்டித்து வருகிறார்கள். “விஜய்க்கு அதிக ரசிகர்கள் இருப்பது உண்மைதான். ஆனால் மலையாள நடிகர்களை விட அதிக ரசிகர்கள் இருப்பதாக சொல்வதை ஏற்க முடியாது” என்று அவர்கள் கருத்து பதிவிடுகிறார்கள்.தொடர்புடைய செய்திகள்

1. இடைத்தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்பு எப்போது?
தமிழகத்தில் 22 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் 13 தொகுதிகளில் தி.மு.க.வும், 9 தொகுதிகளில் அ.தி.மு.க.வும் வெற்றி பெற்றுள்ளன.
2. கேரளாவில் காங்கிரஸ் முன்னிலை, பா.ஜனதாவிற்கு ஏமாற்றம்
கேரளாவில் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது. சபரிமலை விவகாரத்தை பெரிதும் எதிர்பார்த்த பா.ஜனதாவிற்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.
3. அரவக்குறிச்சி பிரசாரத்தில் சர்ச்சை பேச்சு: கமல்ஹாசனுக்கு மதுரை ஐகோர்ட்டு முன்ஜாமீன் வழங்கியது
அரவக்குறிச்சி பிரசாரத்தில் சர்ச்சை பேச்சு குறித்த வழக்கில் கமல்ஹாசனுக்கு முன்ஜாமீன் வழங்கி, மதுரை ஐகோர்ட்டு நேற்று உத்தரவிட்டது. அதற்கான தீர்ப்பில் திருக்குறள்களை மேற்கோள் காட்டி நீதிபதி அறிவுரையும் வழங்கி உள்ளார்.
4. கேரளாவில் சுயேச்சை வேட்பாளருக்கு கத்திக்குத்து
கேரளாவில் சுயேச்சை வேட்பாளர் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டது.
5. கேரளாவில் உள்ள குப்பைகளை தமிழக பகுதியில் கொட்டுவதா? நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்
கேரளாவில் உள்ள குப்பைகளை தமிழக பகுதியில் கொட்டுவதா? என சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். மேலும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.