சினிமா செய்திகள்

விபத்தில் சிக்கி நடிகை காயம் + "||" + Actress injured in accident

விபத்தில் சிக்கி நடிகை காயம்

விபத்தில் சிக்கி நடிகை காயம்
விபத்தில் சிக்கி நடிகை ஜெயஸ்ரீ சிவதாஸ் காயமடைந்தார்.

மலையாள பட உலகின் இளம் நடிகை ஜெயஸ்ரீ சிவதாஸ். இவருக்கு 20 வயது ஆகிறது. ‘1948 காலம் பரஞ்சத்,’ ‘நித்ய ஹரிதா நாயகன்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். நிவின் பாலியுடன் ‘ஆக்‌ஷன் ஹீரோ பைஜூ’ என்ற படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.

2007-ல் ‘ஓரிடத்தொரு பழயுண்டு’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான கேரள மாநில அரசு விருதை பெற்றுள்ளார். ஜெயஸ்ரீ, கொச்சியில் தனது காரில் ஏறுவதற்கு தயாராக நின்றபோது எதிரே அதிக வேகத்தில் ஒரு ஆட்டோரிக்‌ஷா வந்துள்ளது.

அந்த ரிக்‌ஷா திடீரென்று ஜெயஸ்ரீ மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு அவர் காயம் அடைந்தார். உடனடியாக ஜெயஸ்ரீயை கொச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.