சினிமா செய்திகள்

திரைக்கு வரும் ஆபாச சர்ச்சை படம் - ரசிகர்களை சந்திக்கும் ஓவியா + "||" + Coming to the screen Controversy picture - Oviya meets fans

திரைக்கு வரும் ஆபாச சர்ச்சை படம் - ரசிகர்களை சந்திக்கும் ஓவியா

திரைக்கு வரும் ஆபாச சர்ச்சை படம் - ரசிகர்களை சந்திக்கும் ஓவியா
நடிகை ஓவியா ரசிகர்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

டி.வி. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமான ஓவியா தற்போது பெண் டைரக்டர் அனிதா உதீப் இயக்கத்தில் ‘90 எம்.எல்’ படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. முத்த காட்சி, படுக்கை அறை காட்சி, மது, சிகரெட் போன்றவை டிரெய்லரில் இடம்பெற்று இருந்தன.

படத்தில் நடித்திருந்த பெண்களே இரட்டை அர்த்த வசனங்கள் பேசினர். ஓவியா மது அருந்துகிறார். கஞ்சா அடிக்கிறார். ஆபாசமாகவும் பேசுகிறார். இந்த படத்தை வலைத்தளத்தில் பலரும் கண்டித்து வருகிறார்கள். படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று பெண்கள் அமைப்பை சேர்ந்தவர்கள் கருத்து பதிவிட்டுள்ளனர்.

அதன்பிறகு வெளியான 2-வது டிரெய்லரிலும் பெண்கள் மது அருந்தி புகைப்படிக்கும் காட்சிகள் உள்ளன. எதிர்ப்பாளர்களுக்கு பதில் அளித்த ஓவியா, “விதையை வைத்து பழத்தின் ருசியை தீர்மானிக்காதீர்கள்” என்றார். படத்துக்கு தணிக்கை குழுவினர் ‘ஏ’ சான்றிதழ் அளித்துள்ளனர். இந்த படம் குறித்து இயக்குனர் அனிதா உதீப் கூறும்போது, “பெண்கள் கட்டமைப்புக்குள் வாழாமல் சொந்தமாக முடிவு எடுப்பதை படம் பேசும்” என்றார்.

‘90 எம்.எல்’ படம் விரைவில் திரைக்கு வருகிறது. பெரிய நடிகர்கள் படங்களுக்கு ரசிகர்களுக்காக காலை கட்சி திரையிடுவதுபோல் ஓவியா படத்துக்கும் அதிகாலை 5 மணிகாட்சி திரையிட உள்ளனர். அப்போது ரசிகர்களை தியேட்டரில் நேரில் சந்திப்பேன் என்று ஓவியா டுவிட்டரில் கூறியுள்ளார்.ஆசிரியரின் தேர்வுகள்...