சினிமா செய்திகள்

போதைக்கு எதிரான பிரசாரத்தில் சஞ்சய்தத் + "||" + Sanjay Dutt in anti-drug campaign

போதைக்கு எதிரான பிரசாரத்தில் சஞ்சய்தத்

போதைக்கு எதிரான பிரசாரத்தில் சஞ்சய்தத்
போதைக்கு எதிரான பிரசாரத்தில் நடிகர் சஞ்சய்தத் ஈடுபட்டுள்ளார்.

மும்பை தொடர் குண்டுவெடிப்பின்போது, சட்ட விரோதமாக ஆயுதம் வைத்திருந்த வழக்கில் சிக்கி சிறை தண்டனை அனுபவித்தவர் பிரபல இந்தி நடிகர் சஞ்சய்தத். இவருக்கு இளம் வயதில் போதை பழக்கம் இருந்தது. பின்னர் அதில் இருந்து படிப்படியாக மீண்டார். அவரது வாழ்க்கை ‘சஞ்சு’ சென்ற பெயரில் சினிமா படமாக வந்தது.

இதில் சஞ்சய்தத் கதாபாத்திரத்தில் ரன்பீர்கபூர் நடித்து இருந்தார். சஞ்சய்தத்தின் போதை பழக்கம் மற்றும் பெண்கள் தொடர்பு பற்றிய உண்மை சம்பவங்களை அப்படியே படத்தில் காட்சிப்படுத்தி இருந்தனர். இந்த நிலையில் சஞ்சய்தத் தற்போது போதைக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளார். இதுகுறித்து சஞ்சய்தத் சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:-

“போதை பழக்கத்தை இந்தியாவில் இருந்து அகற்ற ஏதேனும் செய்ய வேண்டும் என்ற உணர்வு எனக்கு இருந்தது. அதை நோக்கி போதை இல்லா இந்தியா இயக்கம் அடியெடுத்து வைத்துள்ளது. போதை விஷயங்கள் எனது சொந்த வாழ்க்கை அனுபவங்கள் மூலம் எனக்கு நெருக்கமாக உள்ளது. எனவேதான் எனது நாட்டின் இளைஞர்களுக்கு உதவுவதற்காக இந்த பிரசாரத்தில் ஈடுபடுகிறேன்.” இவ்வாறு கூறியுள்ளார்.

வருகிற 18-ந் தேதி இந்த போதைக்கு எதிரான பிரசார இயக்கம் தொடங்குகிறது. இதற்கு சஞ்சய்தத்துடன் நடிகர்கள் வருண் தவான், கபில் ஷர்மா, வருண் ஷர்மா, நடிகைகள் சோனாக்‌ஷி சின்ஹா, பிரனிதி சோப்ரா ஆகியோரும் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.