சினிமா செய்திகள்

திருமணத்துக்கு மறுத்ததால் தற்கொலைநடிகையின் காதலன் கைது + "||" + Suicide by refusing to marry Actress's boyfriend arrested

திருமணத்துக்கு மறுத்ததால் தற்கொலைநடிகையின் காதலன் கைது

திருமணத்துக்கு மறுத்ததால் தற்கொலைநடிகையின் காதலன் கைது
தெலுங்கில் ‘பவித்ரா பந்தனம்’ டி.வி. தொடரில் நடித்து ஆந்திரா மற்றும் தெலுங்கானா ரசிகர்களிடம் பிரபலமாக இருந்த ஜான்சி ஐதராபாத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
தெலுங்கில் ‘பவித்ரா பந்தனம்’ டி.வி. தொடரில் நடித்து ஆந்திரா மற்றும் தெலுங்கானா ரசிகர்களிடம் பிரபலமாக இருந்த ஜான்சி ஐதராபாத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். போலீசார் பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது ஜான்சியை சூர்யா தேஜா என்ற வாலிபர் காதலித்து கைவிட்டதால் மனம் உடைந்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. ஜான்சியின் பெற்றோரும் சூர்யா தேஜா மீது போலீசில் புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து தலைமறைவாக இருந்த சூர்யா தேஜாவை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:-

சூர்யா தேஜா மொபைல் கடை வைத்துள்ளார். ஜான்சியுடன் அவருக்கு கடந்த வருடம் ஏப்ரல் மாதம் பழக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்துள்ளது. ஜான்சி நடிப்பது சூர்யா தேஜாவுக்கு பிடிக்கவில்லை. நடிப்புக்கு முழுக்கு போடுமாறு வற்புறுத்தி வந்தார். ஜான்சியும் அதை ஏற்று அழகு நிலையம் நடத்த முடிவு செய்தார். தன்னை திருமணம் செய்துகொள்ளும்படியும் வற்புறுத்தினார்.

ஆனால் ஜான்சி நடத்தையில் சூர்யா தேஜா சந்தேகப்பட்டு அவரை திருமணம் செய்ய மறுத்து சந்திப்பதையும் தவிர்த்தார். இதனால் ஜான்சி தற்கொலை முடிவை எடுத்துள்ளார்.

சூர்யா தேஜாவை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி 2 வாரம் நீதிமன்ற காவலில் அடைத்துள்ளனர்.