சினிமா செய்திகள்

என்.டி.ராமராவ் வாழ்க்கை படத்தில் ரூ.45 கோடி நஷ்டம் + "||" + NT Rama Rao's life in film Rs 45 crore loss

என்.டி.ராமராவ் வாழ்க்கை படத்தில் ரூ.45 கோடி நஷ்டம்

என்.டி.ராமராவ் வாழ்க்கை படத்தில் ரூ.45 கோடி நஷ்டம்
மறைந்த ஆந்திர முதல்-மந்திரியும், பிரபல தெலுங்கு நடிகருமான என்.டி.ராமராவ் வாழ்க்கை கதையை 2 பாகங்களாக படமாக எடுத்தனர்.
றைந்த ஆந்திர முதல்-மந்திரியும், பிரபல தெலுங்கு நடிகருமான என்.டி.ராமராவ் வாழ்க்கை கதையை 2 பாகங்களாக படமாக எடுத்தனர். என்.டி.ராமராவ் வேடத்தில் அவரது மகன் பாலகிருஷ்ணாவும், மனைவி பசவதாரகம் கதாபாத்திரத்தில் வித்யாபாலனும் நடித்தனர். மேலும் சில முன்னணி நடிகர், நடிகைகளையும் அதிக சம்பளம் கொடுத்து நடிக்க வைத்தனர்.

முதல் பாகம் படத்துக்கு ரூ.70 கோடி செலவானது. ஆனால் படம் திரைக்கு வந்தபிறகு எதிர்பார்த்த வரவேற்பு இல்லை. தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் இல்லாமல் காலியாக கிடந்தன. உலகம் முழுவதும் இந்த படம் மொத்தம் ரூ.45 கோடி மட்டுமே வசூலித்தது. இதில் வினியோகஸ்தர்களுக்கு ரூ.25 கோடி திரும்ப கிடைத்தது. மீதி ரூ.45 கோடி நஷ்டம் ஏற்பட்டது.

நஷ்டத்தை திருப்பி தருமாறு வினியோகஸ்தர்கள் போர்க்கொடி உயர்த்தினர். இதைத்தொடர்ந்து நஷ்டமடைந்த வினியோகஸ்தர்களுக்கு பாலகிருஷ்ணா பணத்தை திருப்பி கொடுத்து வருகிறார். முதல் பாகம் ஓடாததால் இரண்டாம் பாகத்தை வாங்க யாரும் முன்வரவில்லை. தியேட்டர் அதிபர்களும் திரையிட மறுக்கிறார்கள்.

இதனால் இரண்டாம் பாகத்தை வெளியிடுவதை தள்ளிவைத்து கதையில் மாற்றம் செய்து மீண்டும் புதிதாக படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டு உள்ளனர்.