சினிமா செய்திகள்

ஓட்டலில் ஒரு வேளை சாப்பிட ரூ.10 லட்சம்நடிகை ரகுல் பிரீத் சிங் அதிர்ச்சி + "||" + 10 lakhs to eat at a cafe Actress Ragul Breathe Singh shocked

ஓட்டலில் ஒரு வேளை சாப்பிட ரூ.10 லட்சம்நடிகை ரகுல் பிரீத் சிங் அதிர்ச்சி

ஓட்டலில் ஒரு வேளை சாப்பிட ரூ.10 லட்சம்நடிகை ரகுல் பிரீத் சிங் அதிர்ச்சி
தமிழில் தடையற தாக்க, என்னமோ ஏதோ படங்களில் நடித்துள்ள ரகுல் பிரீத்சிங், ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் கார்த்தியுடன் ஜோடி சேர்ந்த பிறகு மேலும் பிரபலமானார்.
மிழில் தடையற தாக்க, என்னமோ ஏதோ படங்களில் நடித்துள்ள ரகுல் பிரீத்சிங், ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் கார்த்தியுடன் ஜோடி சேர்ந்த பிறகு மேலும் பிரபலமானார். அவருடன் மீண்டும் சேர்ந்து நடித்துள்ள தேவ் படம் தற்போது திரைக்கு வந்துள்ளது. சூர்யா ஜோடியாக நடித்துள்ள என்.ஜி.கே. படம் ஏப்ரல் மாதம் வெளியாகிறது.

சிவகார்த்திகேயனுடன் புதிய படத்தில் நடிக்கிறார். தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார். இந்த நிலையில் வெளிநாட்டில் ஓட்டலில் தனக்கு ஏற்பட்ட அதிர்ச்சி அனுபவத்தை ரகுல் பிரீத்சிங் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

“எனது நண்பர்களுடன் லண்டனுக்கு சுற்றுலா சென்று இருந்தேன். அங்கு ஒரு ஓட்டலுக்கு 10 பேர் சாப்பிட சென்றோம். சாப்பிட்டு முடித்தபிறகு பில்லை கொண்டுவந்து நீட்டினார்கள். அதில் 10 பேர் சாப்பிட்டதற்கு உணவு கட்டணம் ரூ.10 லட்சம் என்று இருந்தது. அந்த தொகையை பார்த்ததும் நான் அதிர்ச்சியாகி விட்டேன்.

பிறகு பில் பணத்தை கட்டிவிட்டு பேசாமல் அங்கிருந்து கிளம்பி விட்டோம். இனிமேல் வாழ்க்கையில் அந்த ஓட்டல் பக்கமே போகக்கூடாது என்று முடிவு செய்து இருக்கிறேன்.”

இவ்வாறு அவர் கூறினார்.