சினிமா செய்திகள்

நடிகை சாயிஷாவுடன் அடுத்த மாதம் திருமணம்டுவிட்டரில் ஆர்யா அறிவிப்பு + "||" + ctress Saiisha Marry next month Arya announcement on twitter

நடிகை சாயிஷாவுடன் அடுத்த மாதம் திருமணம்டுவிட்டரில் ஆர்யா அறிவிப்பு

நடிகை சாயிஷாவுடன் அடுத்த மாதம் திருமணம்டுவிட்டரில் ஆர்யா அறிவிப்பு
தமிழில் அறிந்தும் அறியாமலும் படத்தில் அறிமுகமாகி பட்டியல், நான் கடவுள், மதராச பட்டணம், வேட்டை, ராஜா ராணி, இரண்டாம் உலகம், கடம்பன், கஜினிகாந்த் உள்பட பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக உயர்ந்தவர் ஆர்யா.
மிழில் அறிந்தும் அறியாமலும் படத்தில் அறிமுகமாகி பட்டியல், நான் கடவுள், மதராச பட்டணம், வேட்டை, ராஜா ராணி, இரண்டாம் உலகம், கடம்பன், கஜினிகாந்த் உள்பட பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக உயர்ந்தவர் ஆர்யா. இவருக்கு 38 வயது ஆகிறது.

டெலிவிஷனில் ஒளிபரப்பான எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் அவருக்கு மணப்பெண் தேடல் நடந்தது. ஆர்யாவை மணக்க 16 பெண்கள் விருப்பம் தெரிவித்தனர். ஆனால் யாரையும் அவர் தேர்வு செய்யவில்லை. இந்த நிலையில் ஆர்யாவுக்கும், நடிகை சாயிஷாவுக்கும் காதல் மலர்ந்துள்ளதாகவும் இருவருக்கும் அடுத்த மாதம் 10-ந் தேதி ஐதராபாத்தில் திருமணம் நடக்க இருப்பதாகவும் தகவல் பரவியது.

சாயிஷா பிரபல இந்தி நட்சத்திர தம்பதியான திலீப் குமார்-சாயிரா பானுவின் பேத்தி ஆவார். தமிழில் வனமகன், கடைக்குட்டி சிங்கம், ஜூங்கா, கஜினிகாந்த் ஆகிய படங்களில் நடித்துள்ளார். கஜினிகாந்த் படத்தில் ஆர்யா ஜோடியாக நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்ததாக கூறப்பட்டது.

ஆனாலும் திருமணத்தை இருவரும் உறுதிப்படுத்தாமல் இருந்தனர். இந்த நிலையில் சாயிஷாவை திருமணம் செய்துகொள்ள இருப்பதாக நடிகர் ஆர்யா காதலர் தினமான நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இருவரும் ஜோடியாக இருக்கும் படத்தை தனது டுவிட்டரில் வெளியிட்டு, “நானும், சாயிஷாவும் பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தினர் ஆசியுடன் மார்ச் மாதம் திருமணம் செய்துகொள்ள இருக்கிறோம். எங்கள் இருவரின் மகிழ்ச்சியான புதிய பயணத்துக்கு உங்களின் ஆசியையும், அன்பையும் வேண்டுகிறோம்” என்று கூறியுள்ளார்.