சினிமா செய்திகள்

காதலர் தினம் கொண்டாடிய நயன்தாரா + "||" + Nayantara who celebrated Valentine's Day

காதலர் தினம் கொண்டாடிய நயன்தாரா

காதலர் தினம் கொண்டாடிய நயன்தாரா
நயன்தாராவுக்கு ஏற்கனவே சிம்பு, பிரபுதேவாவுடன் காதல் மலர்ந்து தோல்வியில் முடிந்தது. இப்போது நானும் ரவுடிதான் பட டைரக்டர் விக்னேஷ் சிவனுடன் காதலில் இருக்கிறார்.
யன்தாராவுக்கு ஏற்கனவே சிம்பு, பிரபுதேவாவுடன் காதல் மலர்ந்து தோல்வியில் முடிந்தது. இப்போது நானும் ரவுடிதான் பட டைரக்டர் விக்னேஷ் சிவனுடன் காதலில் இருக்கிறார். இருவரும் அடிக்கடி வெளிநாடுகளில் சுற்றி நெருக்கமாக செல்பி எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிடுகிறார்கள். இவர்களுக்கு ரகசிய திருமணம் நடந்துவிட்டது என்று சிலரும், திருமணம் செய்துகொள்ளாமல் சேர்ந்து வாழ்கிறார்கள் என்று சிலரும் கிசுகிசு பரப்பி வருகிறார்கள். நயன்தாரா ரசிகர்களும் விரைவில் திருமணம் செய்துகொள்ளுங்கள் என்று வலைத்தளங்களில் வற்புறுத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் காதலர் தினத்தை கொண்டாடும் வகையில் விக்னேஷ் சிவனுடன் ஒரு புகைப்படத்தை எடுத்து நயன்தாரா தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். ரசிகர்களுக்கு காதலர் தின வாழ்த்தை தெரிவிக்கும் வகையில் இந்த படத்தை அவர் பகிர்ந்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

நயன்தாரா தமிழில் தொடர்ந்து நம்பர்-1 இடத்தை தக்க வைத்துள்ளார். சம்பளத்தை ரூ.5 கோடியாக உயர்த்தி உள்ளதாக தகவல். இந்த வருடம் அவர் நடிப்பில் விஸ்வாசம் படம் திரைக்கு வந்தது. மேலும் ஐரா, கொலையுதிர் காலம், மிஸ்டர் லோக்கல் மற்றும் விஜய் ஜோடியாக ஒரு படம் கைவசம் உள்ளன. இவை அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளன. தெலுங்கில் சைரா நரசிம்ம ரெட்டி, மலையாளத்தில் லவ் ஆக்‌ஷன் டிராமா படங்களில் நடிக்கிறார்.

ஆசிரியரின் தேர்வுகள்...