சினிமா செய்திகள்

சென்னையில் நடந்ததுஸ்ரீதேவி நினைவு நிகழ்ச்சியில் அஜித், போனிகபூர் + "||" + Took place in Chennai Ajith, Ponikapur in Sridevi Memorial

சென்னையில் நடந்ததுஸ்ரீதேவி நினைவு நிகழ்ச்சியில் அஜித், போனிகபூர்

சென்னையில் நடந்ததுஸ்ரீதேவி நினைவு நிகழ்ச்சியில் அஜித், போனிகபூர்
நடிகை ஸ்ரீதேவி கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ந் தேதி துபாயில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள குடும்பத்தினருடன் சென்று இருந்தார்.
டிகை ஸ்ரீதேவி கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ந் தேதி துபாயில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள குடும்பத்தினருடன் சென்று இருந்தார். திருமணம் முடிந்ததும், தான் தங்கி இருந்த நட்சத்திர ஓட்டலுக்கு திரும்பினார். அந்த ஓட்டல் குளியல் அறை தொட்டியில் மூழ்கி திடீரென்று அவர் இறந்து போனார்.

ஸ்ரீதேவி மறைவு இந்தியா முழுவதும் ரசிகர்கள் மத்தியில் பெரிய சோகத்தை ஏற்படுத்தியது. ஸ்ரீதேவியின் முதலாவது ஆண்டு நினைவு தினம் வருகிற 24-ந் தேதி வருகிறது. ஆனாலும் அவரது நட்சத்திரப்படி நேற்று திதி கொடுக்க முடிவு செய்தனர்.

அதன்படி சென்னை ஆழ்வார்பேட்டை சி.ஐ.டி. காலனியில் உள்ள ஸ்ரீதேவியின் வீட்டில் நேற்று காலை திதி நிகழ்ச்சி நடந்தது. சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டன.

இதில் நடிகர் அஜித்குமார் மனைவி ஷாலினியுடன் கலந்துகொண்டார். ஸ்ரீதேவி கணவர் போனிகபூர், இந்தி நடிகர் அனில்கபூர் மற்றும் உறவினர்களும் கலந்துகொண்டனர்.