சினிமா செய்திகள்

வீரர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் கோழைத்தனமானது - நடிகர் சூர்யா + "||" + Deeply Saddened and heartbroken to know about the cowardly attack on CRPFJawans convoy in Pulwama Suriya Sivakumar ‏

வீரர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் கோழைத்தனமானது - நடிகர் சூர்யா

வீரர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் கோழைத்தனமானது - நடிகர் சூர்யா
வீரர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் கோழைத்தனமானது என்று நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.
சென்னை,

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் சென்று கொண்டிருந்த வாகனத்தை குறிவைத்து ஜெய்ஷ் இ முகம்மது இயக்க பயங்கரவாதி நடத்திய கொடூர தாக்குதலில், 40 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். படுகாயம் அடைந்த பல வீரர்கள் இன்னும்  ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  புல்வமா தாக்குதல் நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தநிலையில் நடிகர் சூர்யா டுவிட்டரில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

புல்வாமாவில் சிஆர்பிஎப் வீரர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் கோழைத்தனமானது. தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.