சினிமா செய்திகள்

சசிகுமாருடன் ஜோடி சேர்ந்த நிக்கி கல்ராணி + "||" + Sasikumar Pair Nikki Kalrani

சசிகுமாருடன் ஜோடி சேர்ந்த நிக்கி கல்ராணி

சசிகுமாருடன் ஜோடி சேர்ந்த நிக்கி கல்ராணி
சசிகுமார் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தில், அவருக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார்.
சசிகுமார் நடித்த ‘நாடோடிகள்-2’ படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்த நிலையில் அவர், ‘கொம்பு வச்ச சிங்கம்டா,’ ‘கென்னடி கிளப்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதையடுத்து அவர் கதாநாயகனாக நடிக்கும் ஒரு புதிய படத்தில், அவருக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். இவர்களுடன் ராதாரவி, விஜயகுமார், தம்பிராமய்யா, மனோபாலா, ரமேஷ்கண்ணா, சிங்கம்புலி, நமோ நாராயணன், யோகிபாபு, சதீஷ், கும்கி அஸ்வின், ரேகா, சுமித்ரா, நிரோஷா ஆகியோரும் நடிக்கிறார்கள்.

படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. டைரக்டர் சுந்தர் சி.யிடம் உதவி இயக்குனராக இருந்த கதிர்வேலு டைரக்டு செய்கிறார். அவர் கூறும்போது, “இது, சசிகுமார் நடிக்கும் 19-வது படம். இதில், ஐ.டி.யில் பணிபுரிபவராக அவர் நடிக்கிறார். செந்தூர் பிலிம்ஸ் சார்பில் டி.டி.ராஜா தயாரிக்கிறார். சாம் சி.எஸ். இசையமைக்கிறார். படப்பிடிப்பு பொள்ளாச்சியில் தொடங்கி, தொடர்ந்து அங்கு நடைபெற இருக்கிறது” என்றார்.