சினிமா செய்திகள்

கதிர்-சிருஷ்டி டாங்கே நடித்த படத்தில்24 மணி நேரத்தில் நடக்கும் திகில் சம்பவங்கள் + "||" + 24 hours horror events

கதிர்-சிருஷ்டி டாங்கே நடித்த படத்தில்24 மணி நேரத்தில் நடக்கும் திகில் சம்பவங்கள்

கதிர்-சிருஷ்டி டாங்கே நடித்த படத்தில்24 மணி நேரத்தில் நடக்கும் திகில் சம்பவங்கள்
24 மணி நேரத்தில் நடக்கும் சம்பவங்கள் தான் ‘சத்ரு’ படத்தின் கதை.
‘பரியேறும் பெருமாள்’ படத்தின் மூலம் பரபரப்பான கதிர் நடித்து அடுத்து வெளிவர இருக்கும் படம், ‘சத்ரு.’ இதில், அவருக்கு ஜோடியாக சிருஷ்டி டாங்கே நடித்து இருக்கிறார். பொன்வண்ணன், நீலிமா, மாரிமுத்து, ரிஷி, சுஜாவாருணி, பவன் ஆகியோரும் படத்தில் இருக்கிறார்கள். ‘ராட்டினம்' படத்தில் கதாநாயகனாக வந்த லகுபரன், இந்த படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.

மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்ய, அம்ரிஷ் இசையமைத்து இருக்கிறார். கதை-திரைக்கதை-வசனம்-டைரக்‌ஷன் பொறுப்புகளை நவீன் நஞ்சுண்டான் ஏற்றுள்ளார். படத்தின் சிறப்பு அம்சங்கள் பற்றி அவர் சொல்கிறார்:-  

“இது, ஒரு ஆக்ஷன் த்ரில்லர் படம். 24 மணி நேரத்தில் நடக்கும் சம்பவங்கள்தான் கதை. குற்றவாளிகளாக யார் கண்ணுக்கும் தெரியாமல் வாழும் வில்லன்கள் 5 பேரை துணிச்சல் மிக்க ஒரு போலீஸ் அதிகாரி எப்படி மடக்கி பிடித்து சட்டத்தின் முன்பு நிறுத்துகிறார் என்பதே ‘சத்ரு’ படத்தின் திரைக்கதை. படம், மார்ச் 1-ந் தேதி திரைக்கு வரும்.

ரகுகுமார் என்கிற ராஜரத்தினம், ஸ்ரீதரன் ஆகிய இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர். ‘மரகத நாணயம்,’ ‘ராட்சசன்’ ஆகிய படங்களை தயாரித்த டில்லிபாபு, இந்த படத்தை வெளியிடுகிறார்.”