சினிமா செய்திகள்

கவிஞர் வைரமுத்து எழுதிய தத்துவ பாடல்! + "||" + Poet Vairamuthu philosophical song

கவிஞர் வைரமுத்து எழுதிய தத்துவ பாடல்!

கவிஞர் வைரமுத்து எழுதிய தத்துவ பாடல்!
அமீரா படத்தில் கவிஞர் வைரமுத்து தத்துவ பாடல் ஒன்றை எழுதி உள்ளார்.
சமீபகாலமாக தமிழ் திரைப்பாடல்களில் தத்துவ பாட்டு இல்லை என்ற குறையை தீர்க்க வருகிறது, கவிஞர் வைரமுத்து எழுதிய அமீரா பட பாடல். வாழ்க்கை என்பது எதிர்பாராத நிகழ்வுகளால் ஆனது. நாளை என்ன நடக்கும்? என்று தெரியாத சுவாரஸ்யம்தான் வாழ்க்கையை நடத்துகிறது என்ற கருத்தை சொல்லும் பாடல், அது.

`அமீரா' படத்தில் ஆர்.கே.சுரேஷ் கதாநாயகனாகவும், அனுசித்தாரா கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள். ஒரு முக்கிய கதாபாத்திரத்தில், சீமான் நடிக்கிறார். விஷால் சந்திரசேகர் இசையமைக்க, இரா.சுப்பிரமணியன் டைரக்டு செய்கிறார். கவிஞர் வைரமுத்து எழுதிய பாடல் வரிகள்:

``வியாழன் போனால் வெள்ளிக்கிழமை ஊருக்குத் தெரியும்...வெள்ளிக்கிழமை விளைவது என்ன யாருக்குத் தெரியும்? எந்த வளைவில் திரும்புவதென்று ஆறுக்குத் தெரியும்...காலம் எந்த நொடியில் திரும்புமென்று யாருக்குத் தெரியும்? நடந்ததை மறந்தால் சுமையில்லை...நடப்பதை அறிந்தால் சுவையில்லை...இன்ன தேதியில் பரீட்சை என்றால்...இன்று முதலே தொடங்கும் துன்பம்...எதிர்பாராமல் நேரும்போதே காதல் மரணம் இரண்டும் இன்பம்...இறக்கும் தேதி தெரிந்து போனால்...இருக்கும் வரைக்கும் துன்பம்...நம்மை மீறி நல்லது வந்தால்...நான்கு மடங்கு இன்பம்...நடக்கப்போவது நம்வசம் அல்ல...நாளை நடப்பதை எப்படிச் சொல்ல...தேதி குறித்துப் பிள்ளை எடுக்க வாழ்க்கை ஒன்றும் சிசேரியன் அல்ல...''