சினிமா செய்திகள்

சாகசங்கள் நிறைந்த படத்தில், திரிஷா! + "||" + Trisha adventure film

சாகசங்கள் நிறைந்த படத்தில், திரிஷா!

சாகசங்கள் நிறைந்த படத்தில், திரிஷா!
திரிஷா சாகசங்கள் நிறைந்த ஒரு அதிரடி சண்டை படத்தில் நடிக்கிறார்.
‘96’ படத்தின் வெற்றியை அடுத்து திரிஷா சாகசங்கள் நிறைந்த ஒரு அதிரடி சண்டை படத்தில் நடிக்கிறார். அவருடன் சிம்ரன் இணைந்து நடிக்கிறார். இந்த படத்தை சுமந்த் ராதாகிருஷ்ணன் டைரக்டு செய்கிறார். இவர் ஏற்கனவே ‘சதுரம்’ என்ற திகில் படத்தை டைரக்டு செய்தவர். விஜயராகவேந்திரா தயாரிக்கிறார். படத்தை பற்றி அவர் கூறியதாவது:-

“இந்தியாவில் முதல்முறையாக ஆழ்கடல் சாகசங்களும், அதிரடி சண்டை காட்சிகளும் நிறைந்த படமாக இது தயாராகிறது. படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. இத்துடன் ரசிகர்களுக்கு வேறு சில சுவாரசியமான விஷயங்களும் காத்திருக்கிறது. படப்பிடிப்பு அடுத்த மாதம் (மார்ச்) முதல் வாரத்தில் தொடங்குகிறது.

சென்னை, பிச்சாவரம், கேரளா, தாய்லாந்து ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டு இருக்கிறோம். இந்த படத்தில் நடிப்பதற்காக திரிஷாவுக்கும், சிம்ரனுக்கும் கடல் சார்ந்த சாகசங்களுக்கான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.”