சினிமா செய்திகள்

ரூ.1 கோடி மோசடி புகார்: அர்ஜுன் ராம்பால் மீது வழக்கு + "||" + Rs 1 crore fraud complaint: Arjun Rampal on case

ரூ.1 கோடி மோசடி புகார்: அர்ஜுன் ராம்பால் மீது வழக்கு

ரூ.1 கோடி மோசடி புகார்: அர்ஜுன் ராம்பால் மீது வழக்கு
ரூ.1 கோடி மோசடி புகார் தொடர்பாக, நடிகர் அர்ஜுன் ராம்பால் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிரபல இந்தி நடிகர் அர்ஜுன் ராம்பால். இவர் மோஷா, தீவானா பன், தில் ஹை தும்காரா, அசம்பவ், வாதா, எலான், அலாக், ஓம் சாந்தி ஓம், ராக் ஒன் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் பெற்றுள்ளார். இவர் மும்பையில் உள்ள ஒரு நிறுவனத்திடம் ரூ.1 கோடி கடன் வாங்கி இருந்தார்.

90 நாட்களில் திருப்பி தந்துவிடுவதாக காசோலையும் வழங்கி இருந்தார். கடனுக்கு 12 சதவீதம் வட்டி தருவதாகவும் உறுதி அளித்து இருந்தார். குறிப்பிட்ட தேதியில் ராம்பால் கொடுத்த காசோலையை அந்த நிறுவனம் வங்கியில் செலுத்தியபோது பணம் இல்லாமல் திரும்பி வந்தது.

இதைத்தொடர்ந்து அர்ஜுன் ராம்பாலுக்கு அந்த நிறுவனம் கடந்த அக்டோபர் மாதம் 14 நாட்களுக்குள் பணத்தை திருப்பி அளிக்கும்படி வக்கீல் நோட்டீஸ் அனுப்பியது. ஆனாலும் பணத்தை கொடுக்காததால் அந்த நிறுவனம் கோர்ட்டுக்கு சென்றது. மீண்டும் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியும் அவர் பணத்தை திருப்பி செலுத்தாததால் இப்போது அவர் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதனால் அவர் கைது ஆகலாம் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.