சினிமா செய்திகள்

துணை ராணுவத்தினர் மீது தாக்குதல்: நடிகர்-நடிகைகள் கண்டனம் + "||" + Attack on security forces: Actor-actresses condemned

துணை ராணுவத்தினர் மீது தாக்குதல்: நடிகர்-நடிகைகள் கண்டனம்

துணை ராணுவத்தினர் மீது தாக்குதல்: நடிகர்-நடிகைகள் கண்டனம்
துணை ராணுவத்தினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு, நடிகர் மற்றும் நடிகைகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலையில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட பாதுகாப்பு படை வீரர்கள் உயிர் இழந்தது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்துக்கு நடிகர்-நடிகைகள் டுவிட்டரில் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில், “புல்வாமாவில் துணை ராணுவ வீரர்கள் மீது பயங்கரவாதிகள் கோழைத்தனமான தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த தாக்குதலால் நான் மனம் உடைந்து போனேன். தாக்குதலில் உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

நடிகர் அக்‌ஷய்குமார், “மத்திய பாதுகாப்பு படையினர் மீது நடந்த கொடுமையான தாக்குதல் நமது நம்பிக்கையை தகர்த்துள்ளது. இந்த சம்பவத்தை நம்மால் மறக்க முடியாது. உயிரிழந்த ஆத்மாக்களுக்கு சாந்தியையும் துயருற்ற குடும்பத்தினருக்கு வலிமையையும் கடவுள் தரவேண்டும்” என்று கூறியுள்ளார்.

நடிகை பிரியங்கா சோப்ரா, “துணை ராணுவத்தினர் மீதான தாக்குதல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தாக்குதல், வெறுப்புகள் விடையாகாது. உயிர் தியாகம் செய்த வீரர்களின் குடும்பத்தினருக்கும் காயம் அடைந்த வீரர்களுக்கும் வலிமை சேரட்டும்” என்று கூறியுள்ளார்.

நடிகர் சல்மான்கான், “நமது நாட்டின் அன்பிற்குரிய வீரர்களுக்கும், நமது குடும்பங்களை காப்பாற்ற இன்னுயிரை கொடுத்த வீரர்களின் குடும்பத்தினருக்கும் இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

நடிகை சபனா ஆஸ்மி, “பாதுகாப்பு படை வீரர்கள் மீதான தாக்குதல் சம்பவத்தை கேள்வியுற்று அதிர்ச்சியடைந்தேன். இந்த பயங்கரவாத தாக்குதலை கண்டிக்கிறேன். இந்த கொலை வெறி தாக்குதல் மூளையற்றவர்கள் செயல். இதனை அனுமதிக்க முடியாது” என்று கூறியுள்ளார்.

மேலும் நடிகர்கள் விஷால், பிரபுதேவா, அபிஷேக் பச்சன், பிரகாஷ்ராஜ், நடிகை அனுஷ்கா சர்மா உள்பட பலர் டுவிட்டரில் கண்டித்து உள்ளனர்.தொடர்புடைய செய்திகள்

1. புல்வாமாவில் காவல் நிலையம் மீது பயங்கரவாதிகள் குண்டுவீச்சு
புல்வாமாவில் காவல் நிலையம் மீது பயங்கரவாதிகள் கையெறி குண்டை வீசியுள்ளனர்.
2. கொல்கத்தாவில் மருத்துவர்கள் மீது தாக்குதல்: மாவட்டத்தில் 3 ஆயிரம் டாக்டர்கள் வேலைநிறுத்தம்
கொல்கத்தாவில் மருத்துவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தை கண்டித்து திருச்சி மாவட்டத்தில் 3 ஆயிரம் டாக்டர்கள் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவை புறக்கணித்தனர்.
3. ஓமன் வளைகுடாவில் எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் மீது அமெரிக்கா நேரடி குற்றச்சாட்டு - வீடியோ ஆதாரத்தை வெளியிட்டது
ஓமன் வளைகுடாவில் எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியது ஈரான் தான் என அமெரிக்கா நேரடியாக குற்றம் சுமத்தி உள்ளது. இதுதொடர்பாக வீடியோ ஆதாரம் ஒன்றை அமெரிக்க ராணுவம் வெளியிட்டுள்ளது.
4. மாநகராட்சி ஊழியர்கள் மீது சரமாரி தாக்குதல் : 2 பேர் கைது
தானேயில் ஆக்கிரமிப்பை அகற்ற சென்ற மாநகராட்சி ஊழியர்களை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
5. பெரியகுளத்தில், வாலிபர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து சாலைமறியல்
வாலிபர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து பெரியகுளத்தில் சாலைமறியல் நடந்தது.