சினிமா செய்திகள்

‘அவஞ்சர்ஸ்’ ஹாலிவுட் படத்துக்கு ஏ.ஆர்.முருகதாஸ் வசனம் + "||" + AR Murugadoss to dialogues for Avengers Tamil version

‘அவஞ்சர்ஸ்’ ஹாலிவுட் படத்துக்கு ஏ.ஆர்.முருகதாஸ் வசனம்

‘அவஞ்சர்ஸ்’ ஹாலிவுட் படத்துக்கு ஏ.ஆர்.முருகதாஸ் வசனம்
அவஞ்சர்ஸ் ஹாலிவுட் படத்துக்கு டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ் வசனம் எழுதுகிறார்.

ஸ்பைடர் மேன், பேட்மேன், அயன்மேன், ஹல்க், தார், உள்பட சூப்பர் ஹீரோ படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இந்த படங்கள் வசூலையும் வாரி குவிக்கின்றன. அவஞ்சர்ஸ் சூப்பர் ஹீரோ படத்துக்கும் தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. அவஞ்சர்ஸ் பட வரிசையில் தற்போது ‘அவஞ்சர்ஸ்: என்ட்கேம்’ என்ற படம் தயாராகி உள்ளது.

இதில் ராபர்ட் டவுனி ஜூனியர், கிறிஸ் ஹெம்ஸ்வொர்த், மார்க் ரூபலோ, கிறிஸ் எவான்ஸ் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை அந்தோனி ரூசோ, ஜோ ரூசோ ஆகியோர் இயக்கி உள்ளனர். வருகிற ஏப்ரல் மாதம் உலகம் முழுவதும் திரைக்கு வருகிறது. இந்தியாவில் இந்த படம் தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் மொழி மாற்றம் செய்து வெளியிடப்படுகிறது. ஆங்கிலத்திலும் வெளியாகிறது.

அவஞ்சர்ஸ் என்ட்கேம் படத்தின் தமிழ் பதிப்புக்கான வசனத்தை டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ் எழுதுகிறார். இதுபற்றி ஏ.ஆர்.முருகதாஸ் கூறும்போது, “எனக்கு சூப்பர் ஹீரோ படங்கள் மிகவும் பிடிக்கும். அவஞ்சர்ஸ் சூப்பர் ஹீரோ படத்தில் நானும் ஒரு அங்கமாக மாறி இருப்பதில் மகிழ்ச்சி. ஒரிஜினல் படத்தின் ஆன்மா குறையாத அளவுக்கு எந்த சமரசமும் இல்லாமல் தமிழில் வசனம் எழுதி இருக்கிறேன்” என்றார்.