சினிமா செய்திகள்

புதிய படத்தில் ரஜினிகாந்த் ஜோடி நயன்தாரா? + "||" + Rajinikanth pairing with Nayantara in new film?

புதிய படத்தில் ரஜினிகாந்த் ஜோடி நயன்தாரா?

புதிய படத்தில் ரஜினிகாந்த் ஜோடி நயன்தாரா?
புதிய படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நயன்தாரா நடிப்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் தள்ளிப்போவதால் அடுத்து புதிய படத்தில் நடிக்க தயாராகி உள்ளார். இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் டைரக்டு செய்கிறார். இவர் ரமணா, கஜினி, துப்பாக்கி, கத்தி, சர்கார் உள்பட பல வெற்றி படங்களை இயக்கியவர்.

சில மாதங்களுக்கு முன்பு ரஜினியிடம் கதை சொல்லி ஒப்புதல் பெற்றார். அந்த கதையை மேலும் மெருகூட்டும்படி ரஜினி அறிவுறுத்தி இருந்தார். தற்போது முழு திரைக்கதையும் தயாராகி உள்ளது. அதை படித்து ரஜினிகாந்தும் திருப்தியாகி உள்ளார். மார்ச் மாதம் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டு உள்ளனர்.

இந்த படத்தை முழு அரசியல் படமாக எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்துக்கு நாற்காலி என்று பெயர் வைக்க பரிசீலிப்பதாக தகவல் வெளியானது. ஆனால் நாற்காலி பெயரை தேர்வு செய்யவில்லை என்று முருகதாஸ் மறுத்தார். தற்போது படத்தில் நடிக்கும் இதர நடிகர்-நடிகைகள், தொழில் நுட்ப கலைஞர்கள் தேர்வு நடக்கிறது. கதாநாயகியாக நடிக்க கீர்த்தி சுரேஷ் பெயர் அடிபட்டது. ஆனால் இப்போது நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சந்திரமுகி படத்தில் இருவரும் சேர்ந்து நடித்துள்ளனர். படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார்.


தொடர்புடைய செய்திகள்

1. கன்னியாகுமரியில் பரபரப்பு விஷம் குடித்து விட்டு போலீஸ்நிலையத்தில் தஞ்சம் அடைந்த காதல் ஜோடி
கன்னியாகுமரி கடற்கரையில் காதல் ஜோடி விஷம் குடித்து விட்டு போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
2. ‘தர்பார்’ படத்தில் ரஜினி நடித்த காட்சி மீண்டும் கசிந்தது
‘தர்பார்’ படத்தில் ரஜினிகாந்த் நடித்த் வீடியோ காட்சி இணையதளத்தில் கசிந்து வைரலாகி வருகிறது.
3. துப்பறியும் புலனாய்வு அதிகாரியாக அரவிந்தசாமி!
சன்தோஷ் பி.ஜெயக்குமார் டைரக்டு செய்ய இருக்கும் புதிய படத்தில், அரவிந்தசாமி
4. மீண்டும் சித்தார்த் ஜோடியாக திரிஷா?
மீண்டும் சித்தார்த் ஜோடியாக திரிஷா நடிப்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
5. ரஜினியிடம் ஆதரவு கேட்பதை விட அவரே ஆதரவு கொடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது : கமல்ஹாசன்
ரஜினியிடம் ஆதரவு கேட்பதை விட அவரே ஆதரவு கொடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.