சினிமா செய்திகள்

‘வர்மா’ படத்தில் துருவ் ஜோடி, இந்தி நடிகை பனிதா சந்து + "||" + Film in 'Verma' Dhruv pair, Hindi actress Banita Sandhu

‘வர்மா’ படத்தில் துருவ் ஜோடி, இந்தி நடிகை பனிதா சந்து

‘வர்மா’ படத்தில் துருவ் ஜோடி, இந்தி நடிகை பனிதா சந்து
வர்மா படத்தில் துருவ் ஜோடியாக, இந்தி நடிகை பனிதா சந்து நடிக்க உள்ளார்.

ஆந்திராவில் வெற்றிகரமாக ஓடிய ‘அர்ஜுன் ரெட்டி’ என்ற தெலுங்கு படம், ‘வர்மா’ என்ற பெயரில் தமிழில் படமாகிறது. அதில், நடிகர் விக்ரமின் மகன் துருவ் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். இந்த படத்தை பாலா டைரக்டு செய்தார். படம் முடிவடைந்த நிலையில், படத்தின் தயாரிப்பு நிறுவனம் ‘வர்மா’ படத்தை கைவிடுவதாக அறிவித்து, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

‘வர்மா’ படம் எதிர்பார்த்த அளவுக்கு விறுவிறுப்பாக இல்லை என்றும், ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தில் இருந்த உயிரோட்டம், ‘வர்மா’ படத்தில் இல்லை என்றும் கூறியதுடன், ‘வர்மா’ படத்தை வேறு ஒரு டைரக்டரின் இயக்கத்தில் திரும்ப எடுக்கப் போவதாக கூறி, தயாரிப்பாளர் பரபரப்பை ஏற்படுத்தினார். கதாநாயகன் துருவ்வை தவிர, மற்ற நடிகர்-நடிகைகள் அனைவரையும் மாற்றப்போவதாகவும் அவர் கூறினார்.

இதுபற்றி டைரக்டர் பாலா கூறும்போது, “துருவ் நலன் கருதி நான் ஒன்றும் சொல்ல விரும்பவில்லை” என்றார். அதைத்தொடர்ந்து, ‘வர்மா’ படத்தை கவுதம் வாசுதேவ் மேனன் டைரக்டு செய்யப்போவதாக கூறப்பட்டது. ஆனால் கவுதம் வாசுதேவ் மேனன், ‘வர்மா’ படத்தை டைரக்டு செய்ய மறுத்து விட்டார்.

இதேபோல், துருவ் ஜோடியாக ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடிக்கப் போவதாக வந்த தகவலும் வெறும் வதந்திதான் என்பது தெரியவந்தது. ‘வர்மா’ படத்தை புதிதாக டைரக்டு செய்யப் போகிறவர் யார்? என்று தெரியாத நிலையில், கதாநாயகி யார்? என்பது உறுதியாகி இருக்கிறது. வளர்ந்து வரும் இந்தி நடிகை பனிதா சந்து, ‘வர்மா’ படத்தின் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். இவர், ‘அக்டோபர்’ என்ற இந்தி படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தார்.

இந்த தகவலை ‘வர்மா’ படத்தின் தயாரிப்பாளரே தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.