சினிமா செய்திகள்

சிம்புவின் தம்பி குறளரசன், மதம் மாறினாரா? + "||" + Simbu's younger brother Kuralarasan, converted to religion?

சிம்புவின் தம்பி குறளரசன், மதம் மாறினாரா?

சிம்புவின் தம்பி குறளரசன், மதம் மாறினாரா?
சிம்புவின் தம்பி குறளரசன், மதம் மாறினாரா என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் சிம்புவுக்கு தமிழ் இலக்கியா என்ற தங்கையும், குறளரசன் என்ற தம்பியும் இருக்கிறார்கள். தமிழ் இலக்கியாவுக்கு திருமணமாகி விட்டது. அவர் கணவர் மற்றும் குழந்தையுடன் ஐதராபாத்தில் வசிக்கிறார். தம்பி குறளரசன், சிம்புவின் சில படங்களில் தலையை காட்டியிருக்கிறார். சிம்பு நடித்த ‘இது நம்ம ஆளு’ படத்துக்கு இசையமைத்து இருந்தார். தொடர்ந்து சில படங்களில் இசையமைக்க அவருடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இந்த நிலையில், குறளரசன் நேற்று அவருடைய அப்பா டி.ராஜேந்தர், அம்மா உஷா ராஜேந்தர் ஆகியோருடன் சென்னை அண்ணாசாலையில் உள்ள தர்காவுக்கு சென்றார். அதைப்பார்த்த சிலர் வீடியோ படம் எடுத்து சமூகவலைதளங்களில் வெளியிட்டனர். அதோடு, “குறளரசன் முஸ்லிம் மதத்துக்கு மாறிவிட்டார்” என்று ஒரு தகவலையும் வெளியிட்டார்கள். அது, திரையுலகினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுபற்றி குறளரசனிடம் கேட்டபோது, “ஒரு வேண்டுதலுக்காக நான் அண்ணாசாலையில் உள்ள தர்காவுக்கு சென்றேன். என்னுடன் எங்க அப்பாவும், அம்மாவும் கூட வந்தார்கள். அதைப்பார்த்து நான் முஸ்லிம் மதத்துக்கு மாறிவிட்டதாக வதந்தியை பரப்பி விட்டார்கள்” என்று கூறினார்.