சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயனின் பிறந்தநாள் பரிசாக ”மிஸ்டர் லோக்கல்” டீசர் வெளியீடு + "||" + Sivakarthikeyan birthday gift Mister Local Teaser Release

சிவகார்த்திகேயனின் பிறந்தநாள் பரிசாக ”மிஸ்டர் லோக்கல்” டீசர் வெளியீடு

சிவகார்த்திகேயனின் பிறந்தநாள் பரிசாக ”மிஸ்டர் லோக்கல்” டீசர் வெளியீடு
சிவகார்த்திகேயனின் 34ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிப்பில் உருவாகி வரும் மிஸ்டர் லோக்கல் படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது.
சீமராஜா படத்தைத் தொடர்ந்து இயக்குனர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் படம் மிஸ்டர் லோக்கல். வேலைக்காரன் படத்தைத் தொடர்ந்து இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். மேலும் இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் ராதிகா, சதீஷ், யோகி பாபு உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.

ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி இசையமைத்துள்ளார். சிவகார்த்திகேயனின் பிறந்தநாளான இன்று அவருக்கு சினிமா பிரபலங்கள் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். 

இந்த நிலையில், சிவகார்த்திகேயனின் 34 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு மிஸ்டர் லோக்கல் படத்தின் டீசர் இன்று வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுவருகிறது. இப்படம் வரும் மே 1ம் தேதி திரைக்கு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.