சினிமா செய்திகள்

தாமதமாகும் 25-வது ‘ஜேம்ஸ் பாண்ட்’ படம் + "||" + Delayed 25th James Bond movie

தாமதமாகும் 25-வது ‘ஜேம்ஸ் பாண்ட்’ படம்

தாமதமாகும் 25-வது ‘ஜேம்ஸ் பாண்ட்’ படம்
25-வது ‘ஜேம்ஸ் பாண்ட்’ படம், தாமதமாக வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.

ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். வசூலிலும் இந்த படங்கள் சாதனை நிகழ்த்துகின்றன. இதுவரை 24 ஜேம்ஸ் பாண்ட் படங்கள் வந்துள்ளன. 25-வது படத்தை தயாரிக்கும் பணிகள் தொடங்கி உள்ளன.

முந்தைய படத்தில் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடித்த டேனியல் கிரேக் புதிய படத்தில் நடிக்கவில்லை என்றும் அவருக்கு பதில் இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன், இட்ரிஸ் எல்பா ஆகியோரில் ஒருவர் நடிப்பார் என்றும் தகவல் பரவியது. இறுதியில் டேனியல் கிரேக் நடிப்பது உறுதி செய்யப்பட்டது.


டேனி பாயில் இந்த படத்தை இயக்குவதாக இருந்தது. ஆனால் அவர் வேறு வேலைகளில் இருந்ததால் அவருக்கு பதில் கேரி ஜோசி புகுனகா இயக்குகிறார். இந்த படம் அடுத்த வருடம் 2020 பிப்ரவரி 14-ந்தேதி வெளியாகும் என்று அறிவித்து இருந்தனர். ஆனால் தற்போது மேலும் 2 மாதங்கள் தாமதமாக ஏப்ரல் 8-ந்தேதி திரைக்கு வரும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.