சினிமா செய்திகள்

வெளிநாடுகளில் சாயிஷாவுடன் சுற்றும் நடிகர் ஆர்யா + "||" + Actor Arya circulate with Saaisha in foreign countries

வெளிநாடுகளில் சாயிஷாவுடன் சுற்றும் நடிகர் ஆர்யா

வெளிநாடுகளில் சாயிஷாவுடன் சுற்றும் நடிகர் ஆர்யா
விரைவில் திருமணமாக உள்ள ஜோடியான நடிகர் ஆர்யாவும், சாயிஷாவும் வெளிநாடுகளில் சுற்றி வருகின்றனர்.

நடிகர் ஆர்யாவுக்கு திருமணம் நிச்சயமாகி உள்ளது. நடிகை சாயிஷாவை மணக்கிறார். இவரும் கஜினிகாந்த் படத்தில் ஜோடியாக நடித்துள்ளனர். திருமணம் மார்ச் மாதம் நடக்கும் என்று காதலர் தினத்தில் ஆர்யா அறிவித்தார். தற்போது வெளிநாடுகளில் ஆர்யாவும் சாயிஷாவும் சுற்றுகிறார்கள்.

அங்கு ஜோடியாக எடுத்துக்கொண்ட படங்களை ஆர்யா சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார். அவை வைரலாகி வருகின்றன. கஜினிகாந்த் படத்தில் நடித்தபோதே இருவரும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் வந்தன. ஆனால் இது காதல் திருமணம் இல்லை என்றும் பெற்றோர்கள் முடிவு செய்த திருமணம் என்றும் சாயிஷாவின் அம்மா ஷாஹினி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், “மற்றவர்கள் நினைப்பதுபோல் ஆர்யா-சாயிஷா திருமணம் காதல் திருமணம் அல்ல. இரு குடும்பத்தினரும் பேசி இந்த திருமணத்தை முடிவு செய்துள்ளோம். ஆர்யாவின் குடும்பத்தினருக்கு சாயிஷாவை பிடித்துப்போனதால் எங்களிடம் பேசினார்கள். எங்களுக்கும் ஆர்யாவை பிடித்து இருந்தது. அதனால் சம்மதித்தோம்” என்றார்.

இவர்கள் திருமணம் மார்ச் 10-ந்தேதி ஐதராபாத்தில் நடக்கிறது. ஆர்யா தற்போது காப்பான் படத்தில் நடித்து வருகிறார். இந்தி படமொன்றிலும் நடிக்கிறார். திருமணத்துக்கு பிறகு சாயிஷா தொடர்ந்து நடிப்பாரா? அல்லது சினிமாவை விட்டு விலகுவாரா? என்று தெரியவில்லை.