சினிமா செய்திகள்

தொண்டு நிறுவனத்துக்கு நிதி திரட்ட நடிகை ஸ்ரீதேவி புடவை ஏலம் + "||" + To Fund for charity Actress Sridevi saree auction

தொண்டு நிறுவனத்துக்கு நிதி திரட்ட நடிகை ஸ்ரீதேவி புடவை ஏலம்

தொண்டு நிறுவனத்துக்கு நிதி திரட்ட நடிகை ஸ்ரீதேவி புடவை ஏலம்
தொண்டு நிறுவனத்துக்கு நிதி திரட்ட, நடிகை ஸ்ரீதேவியின் புடவை ஏலம் விடப்படுகிறது.

தமிழ் படங்களில் நடித்து இந்தி திரையுலகில் கொடி கட்டி பறந்தவர் ஸ்ரீதேவி. 1980-களில் முன்னணி கதாநாயகியாக இருந்தார். 1999-ல் இந்தி பட தயாரிப்பாளர் போனிகபூரை திருமணம் செய்து கொண்டு மும்பையில் குடியேறினார். இவர்களுக்கு ஜான்வி, குஷி என்று 2 மகள்கள் உள்ளனர்.

கடந்த வருடம் பிப்ரவரி 24-ந்தேதி துபாயில் திருமண நிகழ்ச்சியொன்றில் பங்கேற்க சென்று இருந்த ஸ்ரீதேவி அங்குள்ள நட்சத்திர ஓட்டல் குளியல் அறை தொட்டியில் மூழ்கி இறந்து போனார். இது இந்திய பட உலகையும் ரசிகர்களையும் உலுக்கியது. தற்போது அவரது வாழ்க்கையை படமாக்கும் முயற்சிகள் நடக்கின்றன. ஸ்ரீதேவி வேடத்தில் நடிக்க முன்னணி கதாநாயகிகள் பலர் விருப்பம் தெரிவித்து உள்ளனர்.

இந்த நிலையில் ஆதரவற்றோருக்கு நிதி திரட்டுவதற்காக ஸ்ரீதேவியின் புடவை ஒன்று ஏலம் விடப்படுகிறது. இணையதளம் மூலம் இந்த ஏலம் நடக்கிறது. குறைந்த பட்ச ஏலத்தொகையாக ரூ.40 ஆயிரம் நிர்ணயித்து உள்ளனர். ஏலத்தின் மூலம் வசூலாகும் தொகையை ஆதரவற்ற பெண்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் தொண்டு நிறுவனத்துக்கு போனிகபூர் வழங்குகிறார்.