சினிமா செய்திகள்

கார்த்தி படத்தில் 15 நிமிட காட்சி நீக்கம் + "||" + 15 minute scene Removal in Karthi movie

கார்த்தி படத்தில் 15 நிமிட காட்சி நீக்கம்

கார்த்தி படத்தில் 15 நிமிட காட்சி நீக்கம்
கார்த்தி நடித்துள்ள படத்தின் 15 நிமிட காட்சி நீக்கப்பட்டுள்ளது.

ரஜத் ரவி சங்கர் இயக்கத்தில் கார்த்தி-ரகுல்பிரீத் சிங் ஜோடியாக நடித்துள்ள ‘தேவ்’ படம் காதலர் தினத்தில் திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படத்தில் பல காட்சிகளை படக்குழுவினர் கஷ்டப்பட்டு படமாக்கி இருந்தனர். குலுமனாலியில் படக்குழுவினர் வெள்ளத்தில் சிக்கி தவித்த சம்பவங்களும் நடந்தது.

ஆனாலும் படத்தை பார்த்தவர்கள் காட்சிகள் நீளமாக உள்ளது என்றும் இதனால் படத்தில் விறுவிறுப்பு இல்லை என்றும் குறை கூறினர். வசனங்கள் அதிகம் இருப்பதாகவும் சில காட்சிகளை தேவை இல்லாமல் திணித்து இருப்பதாகவும் விமர்சிக்கப்பட்டது. இணையதளத்திலும் முழு படமும் திருட்டுத்தனமாக வெளியாகி மேலும் அதிர்ச்சியை அளித்தது.

இந்த நிலையில் படத்தில் விறுவிறுப்பு இல்லாத காட்சிகளை படக்குழுவினர் தற்போது நீக்கி உள்ளனர். 15 நிமிட காட்சிகள் வெட்டி நீக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. காட்சிகளை நீக்கிய பிறகு படம் விறுவிறுப்பாக உள்ளது என்று பார்த்தவர்கள் பாராட்டுவதாக படக்குழுவினர் தெரிவித்தனர்.