சினிமா செய்திகள்

கதாநாயகியான அருண்பாண்டியன் மகள் + "||" + Arun Pandian daughter heroine

கதாநாயகியான அருண்பாண்டியன் மகள்

கதாநாயகியான அருண்பாண்டியன் மகள்
நடிகர் அருண்பாண்டியன் மகள் கீர்த்தி பாண்டியன் கதாநாயகி ஆகிறார்.
தமிழ் பட உலகில் 1990–களில் முன்னணி நடிகராக இருந்த அருண்பாண்டியன். இவரது மகள் கீர்த்தி பாண்டியன் கதாநாயகி ஆகிறார். கனா படத்தில் நடித்துள்ள தர்‌ஷன் ஜோடியாக புதிய படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை ஹரிஷ் இயக்குகிறார். 3 ஆண்டுகளாக 40–க்கும் மேற்பட்ட மேடை நாடகங்களில் கீர்த்தி பாண்டியன் நடித்துள்ளார். 

அருண் பாண்டியனின் பட தயாரிப்பு தொழிலிலும் இணைந்து பணியாற்றி தற்போது சினிமாவுக்கு வந்துள்ளார். கதாநாயகியானது குறித்து கீர்த்தி பாண்டியன் கூறியதாவது:–

‘‘நான் ஏற்கனவே மேடை நாடகங்களில் நடித்துள்ளதால் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. இதற்காக நிறைய கதைகள் கேட்டு வந்தேன். ஆனாலும் கதைகள் நான் எதிர்பார்த்தபடி அமையவில்லை. இந்த நிலையில் இயக்குனர் ஹரிஷ் சொன்ன கதை பிடித்ததால் நடிக்க ஒப்புக்கொண்டேன். 

குடும்பம் மற்றும் குழந்தைகளுடன் பார்க்கும் படமாக இது இருக்கும். நான் சினிமாவில் நடிக்க தந்தை சம்மதம் தெரிவித்து உள்ளார். உனது வழியை நீயே தேடிக்கொள் என்று அவர் கூறியிருக்கிறார். சினிமா என்பது கவர்ச்சி உலகம். இதில் சிறந்த கதைகளை தேர்வு செய்து நடித்து திறமையான நடிகை என்று பெயர் வாங்குவதே எனது விருப்பமாக உள்ளது.

இவ்வாறு கீர்த்தி பாண்டியன் கூறினார்.