சினிமா செய்திகள்

தமிழ்நாட்டு மாப்பிள்ளை கிடைத்தால் திருமணம் செய்ய தயார் – நடிகை தமன்னா + "||" + Tamil Nadu gets a groom, it is ready to get married -Actress Tamanna

தமிழ்நாட்டு மாப்பிள்ளை கிடைத்தால் திருமணம் செய்ய தயார் – நடிகை தமன்னா

தமிழ்நாட்டு மாப்பிள்ளை கிடைத்தால் திருமணம் செய்ய தயார் – நடிகை தமன்னா
தமிழ்நாட்டில் மாப்பிள்ளை அமைந்தால் திருமணம் செய்துகொள்ள தயாராக இருக்கிறேன் என்று நடிகை தமன்னா கூறினார்.
சீனுராமசாமி இயக்கிய ‘கண்ணே கலைமானே’ படத்தில் உதயநிதி ஜோடியாக நடித்துள்ளார் தமன்னா. இதன் படப்பிடிப்பு முடிந்து திரைக்கு வருகிறது. இந்த படத்தில் நடித்தது குறித்து நடிகை தமன்னா சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:–

‘‘கண்ணே கலைமானே காதல் கதை. எனக்கு வங்கி அதிகாரி வேடம். உதயநிதிக்கு இணையாக எனக்கும் வலுவான கதாபாத்திரம் இந்த படத்தில் அமைந்துள்ளது. படத்தை திரையில் பார்த்து அழுதுவிட்டேன். படப்பிடிப்பில் எனது நடிப்பை சீனுராமசாமி பாராட்டினார். நான் சிறப்பாக நடித்ததற்காக திருநெல்வேலி அல்வா கொடுத்தார். 

அது எனக்கு பெரிய பரிசாக தெரிந்தது. சீனுராமசாமி படங்களில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் இருக்கும். தர்மதுரை படத்தில் அதை உணர்ந்தேன். கண்ணே கலைமானே படத்திலும் அந்த வலிமை இருக்கிறது. படம் சிறப்பாக வந்ததற்காக அவருக்கு நான் முத்தம் கொடுத்தேன். விருதுகளை நான் எதிர்பார்த்து நடிப்பது இல்லை. ரசிகர்கள் பாராட்டினால் அதுவே விருது. 

படத்தில் கவர்ச்சி இருக்கிறது. ஆனால் உடல் கவர்ச்சியாக அது இருக்காது. முகத்தில்தான் அந்த கவர்ச்சி தெரியும். நான் தமிழ் நன்றாக பேசுவதாக ஆச்சரியப்படுகின்றனர். நானும் தமிழ் பெண்தான். தமிழ்நாட்டில் பொருத்தமான மாப்பிள்ளை அமைந்தால் திருமணம் செய்துகொள்ள தயாராக இருக்கிறேன்.

இவ்வாறு தமன்னா கூறினார்.