சினிமா செய்திகள்

இந்திய படங்களில் நடிக்கபாகிஸ்தான் நடிகர்களுக்கு தடை + "||" + Pakistani actors Ban

இந்திய படங்களில் நடிக்கபாகிஸ்தான் நடிகர்களுக்கு தடை

இந்திய படங்களில் நடிக்கபாகிஸ்தான் நடிகர்களுக்கு தடை
பாகிஸ்தான் நடிகர்-நடிகைகள் உள்ளிட்ட கலைஞர்களுடன் பணியாற்றக்கூடாது என்று இந்திய திரைப்பட சம்மேளனம் அறிவித்து உள்ளது.
காஷ்மீரில் இந்திய துணை ராணுவத்தினர் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 வீரர்கள் மரணம் அடைந்த சம்பவம் இந்தியாவையே உலுக்கியது. இந்த கொடூர தாக்குதலுக்கு பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ்-இ-முகமது என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பு ஏற்றுள்ளது.

இதற்கு அரசியல் தலைவர்கள், நடிகர்-நடிகைகள் கண்டனம் தெரிவித்து உள்ளனர். பாகிஸ்தான் நடிகர்-நடிகைகள் உள்ளிட்ட கலைஞர்களுடன் பணியாற்றக்கூடாது என்று இந்திய திரைப்பட சம்மேளனம் அறிவித்து உள்ளது. பாகிஸ்தான் நடிகர்-நடிகைகள் மற்றும் பாடகர்களுக்கு இந்திய படங்களில் வாய்ப்பு அளிக்கக்கூடாது என்று பட அதிபர்களுக்கு சுற்றறிக்கையும் அனுப்பி உள்ளது.

இதைத்தொடர்ந்து அனைத்திந்திய திரைப்பட தொழிலாளர் சங்கமும் பாகிஸ்தான் நடிகர்-நடிகைகள் இந்திய படங்களில் நடிக்க அனுமதிக்க கூடாது என்று தடை விதித்து அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “வீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்துக்கு சங்கம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது. பாகிஸ்தானை சேர்ந்த நடிகர், நடிகைகள் மற்றும் கலைஞர்கள் இந்திய சினிமாவில் பணியாற்ற தடைவிதிக்கப்படுகிறது என்று குறிப்பிட்டு உள்ளது.

இந்த நிலையில் ‘டோட்டல் டமால்’ என்ற இந்தி படத்தை பாகிஸ்தானில் திரையிட மாட்டோம் என்று நடிகர் அஜய் தேவ்கான் அறிவித்து உள்ளார். இந்த படத்தில் அஜய்தேவ்கானுடன் அனில்கபூர், ரிதேஷ் தேஷ்முக், மாதுரி தீட்சித் ஆகியோர் நடித்துள்ளனர். தடை காரணமாக இந்தி படங்களில் நடித்து வந்த மகிரா கான், பாவத் கான் உள்ளிட்ட சில பாகிஸ்தான் நடிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...