சினிமா செய்திகள்

அஜித்தின் மங்காத்தா 2-ம் பாகம் தயாராகுமா? + "||" + Ajith's Mankatha Part 2

அஜித்தின் மங்காத்தா 2-ம் பாகம் தயாராகுமா?

அஜித்தின் மங்காத்தா 2-ம் பாகம் தயாராகுமா?
மங்காத்தா படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முயற்சிகள் நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழில் 2-ம் பாகம் படங்கள் அதிகம் வெளியாகி வசூல் குவிக்கின்றன. எந்திரன், விஸ்வரூபம், சிங்கம், சண்டக்கோழி, சாமி, திருட்டுப்பயலே, வேலையில்லா பட்டதாரி உள்ளிட்ட படங்களின் 2-ம் பாகங்கள் வந்துள்ளன. சூர்யாவின் காக்க காக்க, பிரசன்னாவின் கண்டநாள் முதல் ஆகிய படங்களின் 2-ம் பாகங்களையும் எடுக்க முயற்சிகள் நடக்கின்றன.

இந்த நிலையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித்குமார் நடித்து 2011-ல் வெளியான மங்காத்தா படத்தின் இரண்டாம் பாகத்தையும் எடுக்க முயற்சிகள் நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் அஜித்குமாருடன் அர்ஜுன், திரிஷா ஆகியோரும் நடித்து இருந்தனர். எல்லா கதாபாத்திரங்களையும் வில்லத்தனமாக சித்தரித்து இருந்தது இந்த படத்தின் சிறப்பு.

மங்காத்தா-2 படத்தை எடுக்கும்படி ரசிகர்களும் வெங்கட் பிரபுவிடமும் வற்புறுத்தி உள்ளனர். இதனால் மங்காத்தா-2 உருவாகலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. அஜித்குமார் தற்போது இந்தியில் வெளியான பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார். இந்த படம் முடிந்த பிறகு மங்காத்தா-2 பற்றி படக்குழுவினர் யோசிப்பார்கள் என்று தெரிகிறது.

இதுகுறித்து வெங்கட் பிரபு கூறும்போது, “மங்காத்தா-2 படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. அதை பூர்த்தி செய்ய முடியுமா? என்ற பயம் எனக்கு இருக்கிறது. மீண்டும் அஜித் படத்தை இயக்குவேன். அது மங்காத்தா 2-ம் பாகமா அல்லது வேறு கதையா என்பதை விரைவில் அறிவிப்பேன்” என்றார்.