சினிமா செய்திகள்

பூஜா தேவரியா செல்போனை முடக்கிய விஷமிகள் + "||" + Pooja Thevaria Cellphone is disabled

பூஜா தேவரியா செல்போனை முடக்கிய விஷமிகள்

பூஜா தேவரியா செல்போனை முடக்கிய விஷமிகள்
நடிகை பூஜா தேவரியா தனது செல்போனை சிலர் ஹேக் செய்துள்ளனர் என்று கூறியுள்ளார்.
நடிகர், நடிகைகளின் டுவிட்டர் கணக்குகளும், செல்போன்களும் ஹேக்கர்களால் முடக்கப்பட்டு தகவல்களை திருடுவது தொடர்ந்து நடக்கிறது. சமீபத்தில் நடிகை ஹன்சிகாவின் செல்போனை முடக்கி தகவல்களை எடுத்தார்கள். அந்தரங்க படங்களையும் வலைத்தளத்தில் வெளியிட்டனர். இதனால் பட உலகிலும், ரசிகர்கள் மத்தியிலும் பரபரப்பு ஏற்பட்டது.

இப்போது நடிகை பூஜா தேவரியாவின் செல்போனையும் ஹேக் செய்துள்ளனர். இவர் தமிழில் மயக்கம் என்ன, இறைவி, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். செல்போன் முடக்கப்பட்டதை பூஜா தேவரியா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார்.

“எனது செல்போனை சிலர் ஹேக் செய்துள்ளனர். எனது வாட்ஸ் அப்பில் இருந்து நண்பர்கள் மற்றும் சினிமா துறையினருக்கு தகவல்கள் அனுப்பி தொடர்புகொள்கிறார்கள். எனவே எனது நம்பரை வைத்து இருப்பவர்கள் அதனை நீக்கிவிடும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டு உள்ளார்.