சினிமா செய்திகள்

“காமசூத்ராவின் பாஸ்”தெலுங்கு டைரக்டரை விளாசிய ஸ்ரீரெட்டி + "||" + Sri Reddy complaint on Telugu director

“காமசூத்ராவின் பாஸ்”தெலுங்கு டைரக்டரை விளாசிய ஸ்ரீரெட்டி

“காமசூத்ராவின் பாஸ்”தெலுங்கு டைரக்டரை விளாசிய ஸ்ரீரெட்டி
பிரபல தெலுங்கு டைரக்டர் கொரட்டலா சிவாவை தனது முகநூல் பக்கத்தில் ஸ்ரீரெட்டி கடுமையாக விளாசியுள்ளார்.
பட வாய்ப்பு தருவதாக படுக்கையில் பயன்படுத்தி ஏமாற்றியதாக தெலுங்கு நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்திய தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி ஐதராபாத்தில் தனக்கு பாதுகாப்பு இல்லை என்று இப்போது சென்னையில் குடியேறி இருக்கிறார்.

இவரது பாலியல் குற்றச்சாட்டில் தமிழ் நடிகர்கள், இயக்குனர்களும் சிக்கினார்கள். ஸ்ரீரெட்டியின் வாழ்க்கையை மையமாக வைத்து ரெட்டி டைரி என்ற பெயரில் புதிய படம் தயாராகி வருகிறது. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்ரீரெட்டியும் நடிக்கிறார். லாரன்சின் புதிய படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார்.

ஆனாலும் தனது முகநூல் பக்கத்தில் பாலியல் விவகாரங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். “சினிமா துறையில் இருக்கும் பெரிய ஆட்களின் காதல் சமாசாரங்கள் எனக்கு தெரியும். பல பெண்களிடம் இருந்து தகவல்கள் திரட்டிக்கொண்டு இருக்கிறேன்” என்றார். இந்த நிலையில் பிரபல தெலுங்கு டைரக்டர் கொரட்டலா சிவாவை தனது முகநூல் பக்கத்தில் ஸ்ரீரெட்டி கடுமையாக விளாசியுள்ளார்.

“நான் தூங்கும்போதும், விழிக்கும்போதும் ஒரு நபரை மட்டும் மறக்க முடியவில்லை. அவர்தான் கொரட்டல்லா சிவா. இந்த உலகில் மோசமான நடத்தை உள்ள முதல் ஆள் கொரட்டல்லா சிவாதான். காமசூத்ராவின் பாஸ் அவர். எனது வாழ்க்கையை படமாக்கினால் அந்த படத்தில் அவர் முக்கிய பங்காக இருப்பார்” என்று கூறியுள்ளார். கொரட்டல்லா சிவாவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டு உள்ளார். இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.