சினிமா செய்திகள்

விக்ரம் மகன் துருவ் நடிக்கும் பட வேலைகள் தொடங்கின + "||" + Vikram's son Dhruv starrer began shooting

விக்ரம் மகன் துருவ் நடிக்கும் பட வேலைகள் தொடங்கின

விக்ரம் மகன் துருவ் நடிக்கும் பட வேலைகள் தொடங்கின
விக்ரம் மகன் துருவ் நடிக்கும் படப்பிடிப்பு வேலைகள் மீண்டும் தொடங்கி உள்ளன.
தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடித்து வெற்றிகரமாக ஓடிய ‘அர்ஜுன்ரெட்டி’ படத்தை தமிழில் விக்ரம் மகன் துருவ்வை கதாநாயகனாக அறிமுகப்படுத்தி ‘வர்மா’ என்ற பெயரில் பாலா இயக்கினார். கதாநாயகிகளாக மேகாவும், ரைசா வில்சனும் நடித்தனர். இதன் படப்பிடிப்பு முடிந்து விரைவில் திரைக்கு வர இருந்தது.

இந்த நிலையில் படத்தின் இறுதி பிரதியை பார்த்த தயாரிப்பாளருக்கு திருப்தி இல்லாததால் படம் கைவிடப்படுவதாகவும் முழு படத்தையும் மீண்டும் படப்பிடிப்பு நடத்தி புதிதாக எடுக்க உள்ளதாகவும் அறிவித்தார். இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. முழு வர்மா படத்தையும் கைவிட்டதால் ரூ.10 கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது மீண்டும் இதன் படப்பிடிப்பு வேலைகள் தொடங்கி உள்ளன. புதிய படத்திலும் துருவ் கதாநாயகனாக நடிக்கிறார். மேகாவை மாற்றிவிட்டு புதிய கதாநாயகியாக பனிடா சாந்துவை ஒப்பந்தம் செய்துள்ளனர். இவர் இந்தியில் வருண் தவான் நடித்த அக்டோபர் படத்தில் கதாநாயகியாக நடித்தவர்.

வர்மா தலைப்பை மாற்றிவிட்டு ஆதித்யா வர்மா என்று படத்துக்கு பெயர் வைத்துள்ளனர். இந்த படத்தை கிரிசய்யா டைரக்டு செய்கிறார். இவர் தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி படத்தை இயக்கிய சந்தீப் வாங்காவிடம் இணை இயக்குனராக பணியாற்றியவர். இதன் படப்பிடிப்பை விரைவில் தொடங்குகின்றனர்.