சினிமா செய்திகள்

அனுமதி இன்றி புகைப்படத்தை பயன்படுத்திய நிறுவனம் மீது ரூ.71 கோடி நஷ்ட ஈடு கேட்டு கிம் கர்தாஷியன் வழக்கு + "||" + Kim Kardashian sues an online fashion company for using her image without permission

அனுமதி இன்றி புகைப்படத்தை பயன்படுத்திய நிறுவனம் மீது ரூ.71 கோடி நஷ்ட ஈடு கேட்டு கிம் கர்தாஷியன் வழக்கு

அனுமதி இன்றி புகைப்படத்தை பயன்படுத்திய நிறுவனம் மீது ரூ.71 கோடி நஷ்ட ஈடு கேட்டு கிம் கர்தாஷியன் வழக்கு
தனது புகைப்படத்தை பயன்படுத்திய நிறுவனத்தின் மீது ரூ.71 கோடி நஷ்ட ஈடு கேட்டு பிரபல ரியாலிட்டி டிவி நட்சத்திரம் கிம் கர்தாஷியன் வழக்கு தொடர்ந்து உள்ளார்.
ரியாலிட்டி டி.வி. நட்சத்திரமான கிம் கர்தாஷியன்  தனது அனுமதி இன்றி  விளம்பரப்படுத்த தனது பெயர் மற்றும் புகைப்படத்தை பயன்படுத்திய  ஒரு ஆன்லைன் விற்பனை நிறுவனத்திற்கு எதிராக 10 மில்லியன் டாலர்  (ரூ.71 கோடி)  நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்து உள்ளார்.

அமெரிக்காவின் மிஸ் கைடடு என்ற பேஷன் நிறுவனத்திற்கு எதிராக இந்த வழக்கை தாக்கல் செய்து உள்ளார். தனது அனுமதி இன்றி இந்த நிறுவனம் பல சந்தர்ப்பங்களில் தனது பெயரையும்,  புகைப்படத்தையும் பயன்படுத்தியதாக கூறி உள்ளார்.

தனது சமூக வலைதள பக்கங்களை,  நிறுவனத்தின் சமூக வலைதளம் அப்படியே காப்பி  அடித்து உள்ளது என கூறி உள்ளார்.