சினிமா செய்திகள்

பாராளுமன்ற தேர்தல் 2019 : சமூக வலைதளத்தில் மறைமுக பிரசாரத்திற்கு பிரபலங்கள் வைத்த டிமாண்ட் + "||" + Arshad Warsi, Vidya Balan lauded by Twitter for their stance in Cobrapost sting operation

பாராளுமன்ற தேர்தல் 2019 : சமூக வலைதளத்தில் மறைமுக பிரசாரத்திற்கு பிரபலங்கள் வைத்த டிமாண்ட்

பாராளுமன்ற தேர்தல் 2019 : சமூக வலைதளத்தில் மறைமுக பிரசாரத்திற்கு பிரபலங்கள் வைத்த டிமாண்ட்
2019 பாராளுமன்ற தேர்தலுக்கு சமூக வலைதளத்தில் மறைமுக பிரசாரத்திற்கு பிரபலங்கள் முக்கிய டிமாண்ட் வைத்து உள்ளனர். சிலர் அதனை மறுத்தும் உள்ளனர்.
மும்பை,

பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதை முன்னிட்டு அரசியல் கட்சிகள் கூட்டணி அமைப்பது, தேர்தல் அறிக்கை தயாரிப்பது, பிரசார வியூகங்கள் வகுப்பது போன்ற  ஆலோசனைகளில் ஈடுபட்டு உள்ளன. 

அரசியல் கட்சிகள்   ஒவ்வொரு முறையும் அரசியல் பிரசாரத்திற்கு பிரபல நடசத்திரங்களை பயன்படுத்தி கொள்வது  வாடிக்கை. ஆனால் தற்போது  தேர்தல் ஆணையத்தின் கெடுபிடியால் அவர்களுக்கு செலவு செய்யும் பணமும் கணக்கில் வருகிறது. அதனால் சமூக வலைதளங்களில்  பிரபலமாக உள்ளவர்களை அரசியல் கட்சிகள் தேடிபிடித்து தங்கள் கட்சிக்கு பிரசாரம் செய்ய   பேரம் பேசி வருகின்றனர்.

இது குறித்து கோப்ரா போஸ்ட் என்ற பத்திரிகை பாலிவுட் பிரபலங்களிடம் நடத்திய புலனாய்வில்  தெரிய வந்து உள்ளது.

அந்த புலனாய்விற்கு  ‘ஆபரேஷன் கரோக்கி’ என பெயர் வைக்கப்பட்டு உள்ளது.

‘பாலிவுட் நடிகர்களிடம், நீங்கள் கேட்கும் பணத்தை தருகிறோம் நாங்கள் சொல்லும் கட்சிக்கு உங்களின் சமூக வலைதளத்தில் மறைமுகமாக பிரசாரம் மேற்கொள்ள வேண்டும்’  இது லீகல் கிடையாது, இல்லீகலாக பிரசாரம் செய்யப்போகிறீர்கள் என அரசியல் கட்சிகள் சார்பில் பேசப்பட்டு உள்ளது. 

இது குறித்து அந்த பத்திரிகை வீடியோ எடுத்து உள்ளது. கட்சிக்கு ஆதரவாக பதிவிடும் ஒவ்வொரு பதிவிற்கும் பணமாக உங்களிடம் தரப்படும். செக், பேங்க் டிரான்ஸ்பர் என்று  எந்த சிக்கலும் இல்லை என்று அந்த வீடியோவில் பிரபலங்களிடம் சொல்கிறார்கள். 

சுமார் 36  பிரபலங்கள் இவர்கள் சொல்லும் கட்சிகளுக்கு ஆதரவாக சமூக வலைதளத்தில் பிரசாரம் செய்ய ஒப்புக்கொண்டுள்ளார்கள். இந்த ஆபரேஷன் கரோக்கி 60 நிமிட ஆவணப் படமாக எடுக்கப்பட்டுள்ளது. 

லட்சக்கணக்கான பொதுமக்கள் சமூக வலைதளத்தில்  இந்த 36 பிரபலங்களையும் பின் தொடர்கிறார்கள். அந்த 36 பிரபலங்களின் பெயர்கள் : அபிஜீத் பட்டாச்சாரியா, கைலாஷ் கெர், மிகா சிங், பாபா செகல், ஜாக்கி ஷராஃப், சக்தி கபூர், விவேக் ஓபராய், சோனு சூட், அமீஷா படேல், மஹிமா சவுத்ரி, ஷெரயாஸ் தல்பாதி, புனித் இஷார், சுரேந்தர பால், பங்கஜ் தீர், நிகிதின் தீர், டிஸ்கா சோப்ரா, தீப்ஸிகா நாக்பல், அகிலேந்திர மிஷ்ரா, ரோஹித் ராய், ராஹுல் பட், சலிம் ஜெய்தி, ராக்கி சாவந்த், அமன் வெர்மா, ஹிதேன் தேஜ்வானி, கவுரி பிரதான், ஈவ்லின் ஷர்மா, மினிஷா லம்பா, கொயினா மித்ரா, பூனம் பாண்டே, சன்னி லியோன், ராஜு ஸ்ரீவஸ்தாவா, சுனில் பால், ராஜ்பால் யாதவ், உப்சனா சிங், க்ருஷ்ணா அபிஷேக், விஜய் இஷ்வர்லால் பவார், கணேஷ் ஆச்சர்யா, சம்பவானா செத்.


இந்த ஆபரேஷனின்போது, நான் பணமும் வாங்கமாட்டேன், யாருக்கும் ஆதரவு தரவும் மாட்டேன் என்று சொல்லியவர்கள் வித்யா பாலன், ஆர்சத் வர்ஸி, ராஜா முராத், சவும்யா தாண்டன் ஆகிய நான்கு பேர் மட்டும்தான், இவர்கள் மட்டுமே இந்த ஆபரேஷனிலிருந்து சிக்காமல் தப்பித்தவர்கள்.

சிக்கிய பிரபலங்கள் குறிப்பிட்ட ஒரு சில கட்சிகளை ஆதரிக்க ஒரு சமூக வலைதள பதிவுக்கு லட்சத்திற்கு மேல் பணம் கேட்டிருக்கின்றனர். சிலர் எட்டு மாதம் வரை நான் தினசரி பதிவிட 2 கோடி வேண்டும் என்று காண்ட்ராக்டே போடும் அளவிற்கு கேட்டிருக்கிறார்கள். இதெல்லாம் அந்த ஆவணப் படத்தில் பதிவாகி இருக்கிறது. அதுவும் பணமாகவே வேண்டும் என்கின்றனர். அப்படி என்றால் அவை அனைத்தும் கருப்பு பணமாகவே பதுக்கப்படும். அந்த வீடியோவில் சில பிரபலங்கள் பேசியது பின்வருமாறு:

சன்னி லியோன் - நான் சமூக வலைதளத்தில் மறைமுக பிரசாரத்திற்கு ஒப்புக்கொண்டால் என் கணவருக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என்று பேரம் பேசுகிறார்.

சோனு சூட்  - எட்டு மாத காண்ட்ராக்ட்டுக்கு எனக்கு 20 கோடி வேண்டும்

கைலாஷ் கெர்-  நீங்கள் என் டீமுடன் பேசுங்கள், எனக்கு இது ஓக்கேதான்.

ராக்கி சாவந்த் - கடந்த முறை நான் ராஜ்நாத் ஜீக்காக வேலை செய்தேன் என்று அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

ஆனால் சோனு சூட், சன்னி லியோன் உள்பட சில பிரபலங்கள்  இதனை மறுத்து உள்ளனர்.