சினிமா செய்திகள்

“எனக்கு பட வாய்ப்புகள் இல்லை என்பதா?” -நடிகை ரகுல் பிரீத் சிங் + "||" + Actress Raukal Breathe Singh question

“எனக்கு பட வாய்ப்புகள் இல்லை என்பதா?” -நடிகை ரகுல் பிரீத் சிங்

“எனக்கு பட வாய்ப்புகள் இல்லை என்பதா?” -நடிகை ரகுல் பிரீத் சிங்
என்க்கு பட வாய்ப்புகள் இல்லை என தவறாக பிரசாரம் செய்கிறார்கள் என்று நடிகை ரகுல் பிரீத் சிங் கூறினார்.
ரகுல்பிரீத் சிங் தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார். காதலர் தினத்தில் கார்த்தியுடன் நடித்த தேவ் படம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கிறது. ரகுல் பிரீத் சிங் ஐதராபாத்தில் அளித்த பேட்டி வருமாறு:-

“காதலர் தினம் கொண்டாடுவதில் எனக்கு நம்பிக்கை இல்லை. இது மேலை நாட்டு கலாசாரம். அதை விழாவாக கொண்டாடுவதில் அர்த்தம் இல்லை. அந்த நாளில் பரிசு பொருட்கள், விருந்து என்று பணத்தை வீணடிக்கிறார்கள். இந்த வருடம் நிறைய படங்களில் நடிக்கிறேன். தமிழில் தொடர்ந்து நடித்ததால் தெலுங்கில் இடைவெளி ஏற்பட்டது.

இதனால் ஆந்திராவில் உள்ளவர்கள் ரகுல் பிரீத் சிங்குக்கு பட வாய்ப்புகள் இல்லை என்று தவறாக பிரசாரம் செய்ய ஆரம்பித்து விட்டனர். நீண்டநாட்கள் காதல் படத்தில் நடிக்க ஆர்வம் இருந்தது. அது தேவ் படத்தில் நிறைவேறியது. இப்போது சிறந்த கதைகளை தேர்வு செய்து நடிக்கும் பக்குவம் எனக்கு வந்துள்ளது.

பிடித்த கதைகளில் நடித்தால் உற்சாகம் வரும். ஸ்ரீதேவி வாழ்க்கை கதையில் அவரது கதாபாத்திரத்தில் நடிக்க விரும்புகிறேன். நேரத்துக்கு சாப்பாடு எடுத்துக்காமல், சரியான உணவு சாப்பிடாமல் 30 வயதில் பலருக்கு மாரடைப்பு வருகிறது. எனவே எல்லோருக்கும் ஆரோக்கியமாக வாழ உடற்பயிற்சி முக்கியம். கதையை கேட்டு கதாபாத்திரத்தில் முழு உணர்வோடு நடிக்கிறேன்”

இவ்வாறு ரகுல் பிரீத் சிங் பேசினார்.