சினிமா செய்திகள்

குத்துச்சண்டை வீராங்கனையாக ஐஸ்வர்யா ராஜேஷ் + "||" + Aishwarya Rajesh is the boxer

குத்துச்சண்டை வீராங்கனையாக ஐஸ்வர்யா ராஜேஷ்

குத்துச்சண்டை வீராங்கனையாக ஐஸ்வர்யா ராஜேஷ்
குத்துச்சண்டை வீராங்கனையாக நடிக்க ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தம் ஆகி உள்ளார்.
விளையாட்டை மையமாக வைத்து அதிக படங்கள் வருகின்றன. விளையாட்டு வீரர்கள் வாழ்க்கை கதைகளும் படமாகின்றன. அந்த வரிசையில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் பெண்கள் கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து ‘கனா’ படம் வந்தது. கிராமத்து ஏழை விவசாயி மகள் கிரிக்கெட்டில் படிப்படியாக வளர்ந்து சர்வதேச போட்டியில் பங்கேற்று எப்படி ஜெயிக்கிறார் என்பது கதை.

இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் கிரிக்கெட் வீராங்கனையாக நடித்து இருந்தார். இந்த படம் வெற்றிகரமாக ஓடி வசூல் சாதனை நிகழ்த்தியது. தற்போது இன்னொரு படத்தில் குத்துச்சண்டை வீராங்கனையாக நடிக்க ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தம் ஆகி உள்ளார். கிராமத்து பெண் சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்று வெற்றி பெறுவது கதை.

கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படமாக தயாராகிறது. ஐஸ்வர்யா ராஜேஷ் தந்தையாக கஜினி வில்லன் பிரதீப் ராவத் நடிக்கிறார். தெலுங்கில் தயாராகும் இந்த படத்தை தமிழிலும் வெளியிட திட்டமிட்டு உள்ளனர். ஏற்கனவே விஜய் தேவரகொண்டாவுடன் தெலுங்கு படமொன்றிலும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருகிறார். இது அவருக்கு இரண்டாவது தெலுங்கு படம்.